குண்டு குண்டா இருக்குற தொப்பையை 15 நாட்களில் குறைக்க இந்த பச்சை இலை ஒன்று போதும்
Vallarai Keerai For Belly Fat: அதிகரிக்கும் உடல் எடையை எளிதில் குறைக்க முடியாது, ஆனால் ஒரு சிறப்பு வகை ஆயுர்வேத பண்புகள் நிறைந்த பச்சை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க வல்லாரை கீரையின் நன்மைகள்: இன்றைய காலக்கட்டத்தில், பலருக்கு உடல் எடை (Weight Loss) அதிகரிக்கும் பிரச்சனை இருந்து வருகின்றனர், நடுத்தர வயதினரை மட்டுமல்ல, பல இளைஞர்களும் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு படிவதால் சிரமப்படுகிறார்கள். இதற்கு முக்கிய தவறான உணவு பழக்கமும், வித்தியாசமான வாழ்க்கை முறையும்தான். அதுமட்டுமின்றி உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், ஒரு சிறப்பு பச்சை இலையை உட்கொண்டால், எளிதாக உடல் எடையவ குறைக்கலாம் என்று கூறியுள்ளார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடையை குறைக்க இந்த இலையை சாப்பிடுங்கள்
நிகில் வாட்ஸின் கூற்றுப்படி, வல்லாரை கீரைகள் (Vallarai Keerai) எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதன் அறிவியல் பெயர் சென்டெல்லா ஆசியாட்டிகா (Centella Asiatica) ஆகும். அதேபோல் சமஸ்கிருதத்தில் மண்டுகபர்ணி என்றும் இந்த கீரையை அழைக்கப்பார்கள். இது போன்ற மூலிகை தான் நம் உடலுக்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | அளவிற்கு மிஞ்சிய உப்பு... இதயம், சிறுநீரகத்தை காலி செய்து விடும்!
வல்லாரை கீரை கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி?
வல்லாரை கீரைகள் எந்த ஆயுர்வேத மருந்துக்கும் குறைவானது அல்ல, இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. வல்லாரை கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் காரணமாக, இது எடையைக் குறைக்க உதவுகிறது. பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் (National Center for Biotechnology Information) அதாவது NCBE படி, உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் வல்லாரை கீரையில் காணப்படுகின்றன, இது உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
வல்லாரை கீரையை எப்படி சாப்பிடுவது?
உடல் எடை குறைய வேண்டுமானால் முதலில் வல்லாரை கீரையின் இலைகளை சுத்தம் செய்து அரைத்து பேஸ்ட் தயாரித்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் கலந்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் உடல் கொழுப்பு குறைய ஆரம்பித்து, அதன் பலன் தெளிவாக தெரியுத் தொடங்கும்.
வல்லாரை கீரையை கஞ்சியாகும் உட்கொள்ளலாம், இது உடல் எடை குறைக்க உதவும். இதற்கு முதலில் புழுங்கல் அரிசி, திணை அரிசி, குதிரை வாலி அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை கழுவி குக்கரில் சேர்த்து சின்ன வெங்காயம் 6, பூண்டு பல், சீரகம், உப்பு மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். பின் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். பின் வல்லாரை கீரையையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். நன்கு வதங்கியதும் கஞ்சியில் கொட்டி நன்கு கலந்துகொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெந்தய நீர்: பாடாய் படுத்தும் பல நோய்களின் வில்லன், தினமும் குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ