உடல் ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ யாருக்கு தான் விருப்பம் இருக்காது. ஆனால் அதற்காக நாம் நிறைய முயற்சிகள் செய்யவேண்டியுள்ளது. ஆரோக்கியத்திற்காக நாம் நிறைய சாப்பிடவேண்டி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விஷயத்தில், நாம் மனிதனைப் பற்றி பேசினால்... மனிதர்கள் தனது வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கும் உயிரினம். அவர்கள் எப்போதும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தங்கள் குடும்பத்திற்கு சேவை செய்ய கட்டாயத்தில் இருக்கும் மனிதர்கள் நிச்சையம் பணத்தை தேடி ஓடவேண்டி தான் உள்ளது. இந்த பிஸியான காலத்தில் தங்களது ஆரோக்கியத்தை பராமரிக்க மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள். தங்களது கடின உழைப்பால் மனிதர்கள் சோம்பலாக உணர்கிறார்கள், மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களாகவும் ஆரோக்கியமற்றவர்களாகவும் மாறுகிறார்கள். 


இந்த சூழலில் நாம் அவர்களில் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில விஷயங்களைக் கொண்டு வந்துள்ளோம், குறிப்பாக இந்த குறிப்புகள் ஆண்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும், இதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தினம் சாப்பிட வேண்டிய மூன்று உணவு பொருட்கள் குறித்து தான் இந்த பதிவு கூறுகிறது.


முட்டை - இதில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் புரதம் நம் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது, இது நம்மை ஆரோக்கியமாகவும் நலமுடனும் வைத்திருக்கிறது. எனவே ஆண்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முட்டையை உட்கொள்ள வேண்டும்.


பால் - நாம் ஒவ்வொரு நாளும் பால் குடிக்க வேண்டும். இது ஊட்டச்சத்துக்களின் மிக அற்புதமான மூலமாகும், மேலும் ஒவ்வொரு நாளும் நம் காலை உணவில் பால் சேர்ப்பதால், நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வோம். குறிப்பாக பால் ஆண்களுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.


பேரிட்சை - ஆற்றல் குறைவாக மற்றும் சோர்வாக நீங்கள் இருந்தால், பேரிட்சை சாப்பிடத் தொடங்குங்கள். உடலுக்கு சிறந்த ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் பேரிட்சையில் மிக அதிகம்.