அடர்த்தியான மற்றும் அழகான கூந்தல் இருக்க வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்படுவதும், அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதாவது அடர்த்தியான மற்றும் நீண்ட அழகான கூந்தலை விரும்பாத பெண்களே இருக்க முடியாது என்ற கூறவேண்டும். தலைமுடியை அழகாக வைத்துக்கொள்வது என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் மிக முக்கியமானது. இந்த கூந்தல் பிரச்சினை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகளவில் இருக்கிறது. நீண்ட அடர்த்தியான கூந்தலுக்கான சில வழிமுறைகளைப் (Tips For Long Hair) பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமுடியை அடர்த்தியாக்க வெளிப்புற பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர, நாம் தினமும் உட்கொள்ளும் உணவு மற்றும் பானமும் மிக முக்கியமானது. ஏனெனில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் முடி நன்றாக வளராது. 


பெரிய பிரச்சனை என்னவென்றால், சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல், நம் தலைமுடி மெலிந்து, பலவீனமாகிறது. அதாவது, உங்கள் தலைமுடியில் பொடுகு, தொற்று இல்லாவிட்டாலும், உங்கள் தலைமுடி தானாக விழு ஆரம்பிகிறது. இதன் காரணமாக முடியின் அடர்த்தி குறைந்து விடுகிறது. 


அத்தகைய சூழ்நிலையில், சில பழங்கள் மற்றும் காய்கறிகள் தவிர, முடி அடர்த்தியாக இருக்க, சில மூலிகைகள் உள்ளன. உங்கள் தலைமுடியை அடர்த்தியாக மாற்ற தினமும் அதை பயன்படுத்தலாம். இந்த மூலிகைகள் ஆயுர்வேத பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இது உடலில் உள்ள பித்த தோஷங்களை சமநிலைப்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துகிறது. இது முடியை அடர்த்தியாக (Hair Growth) இருக்க உதவுகிறது. அப்படியான மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.


ALSO READ | கருமையான தலைமுடி வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!


பிரிங்ராஜ் எண்ணெய் (Bhringraj Oil) மற்றும் பிராமி (வல்லாரை கீரை) மூலம் உங்கள் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றலாம். இவை இரண்டும் முடி அடர்த்தியாக இருக்க உதவும் மூலிகைகள். பிரங்கிராஜின் இலைகளை மென்று சாப்பிட்டால், அதன் சாறு முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முடி அடர்த்தியாக இருக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது. நீங்கள் காலையிலும் மாலையிலும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளலாம்.


அலோ வேரா (Aloe Vera) பற்றி அனைவருக்கும் தெரியும். இது எப்போதும் முடி மற்றும் தோலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அலோ வேரா ஜெல் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் உச்சந்தலையின் pH ஐ சமப்படுத்துவதாக கூறப்படுகிறது. உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்குவதற்கும் ஹைட்ரேட் செய்வதற்கும் இது எளிதான வழியாகும். அலோ வேரா ஜெல் தலை முடிக்கு பூசுவதோடு இல்லாமல், அதை அரைத்து ஜூஸாகவும் அருந்தலாம்.


ALSO READ | வீட்டிலேயே ஈசியா ஹேர் கலரிங் செய்ய சில அற்புதமான டிப்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR