Dry hair: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போய்விட்டதா? இதோ Tips

குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போவதைத் தவிர்க்க, விலையுயர்ந்த பொருட்களுக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல சிகையலங்கார நிபுணர்களூக்கும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் வாழைப்பழம், தேன் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்தால் போதும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2020, 05:56 PM IST
  • அழகுக்கு அழகு சேர்க்கும் கூந்தல்
  • குளிர்காலத்தில் தலைமுடி வறண்டுபோகும்
  • வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி முடியை மிருதுவாக்கலாம்
Dry hair: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போய்விட்டதா? இதோ Tips  title=

புதுடெல்லி: குளிர்காலத்தில், உலர்ந்த கூந்தல் மிகவும் பிரச்சனையாக இருக்கிறது. குளிர்காலத்தில் (winter), வறண்ட சருமத்துடன் முடி உலர்ந்து போய், களை இழந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, தலைமுடி உதிர்ந்துவிடும் என்ற பயமும் இருக்கிறது. குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை மென்மையாக வைத்திருக்க நீங்கள் விலையுயர்ந்த பொருட்களுக்கு பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயார் செய்து வறண்ட கூந்தலை அழகானதாக மாற்றிக் கொள்ளலாம். 

அவகாடோவுடன் முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்க்கவும்
அவக்கோடா (Avacado) மற்றும் முட்டை கலந்த ஹேர் மாஸ்கை தயாரிக்கப்பட்ட கலவையை ஈரமான கூந்தலில் ((hair)பயன்படுத்துங்கள். ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்திய பிறகு 5 நிமிடங்களுக்கு முடி வேர்களை மசாஜ் செய்யவும். இதன் பிறகு முடியை நன்கு அலச வேண்டும். இதனால் உங்கள் தலைமுடி வளர்வதோடு, குளிர்காலத்தில் கூட மென்மையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும்

தேங்காய் எண்ணெயில் (coconut-oil) முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. அதே நேரத்தில், பாதாம் எண்ணெய் கூந்தலில் பலவீனமான இயற்கை பாதுகாப்பு அடுக்கை சரிசெய்கிறது. இரண்டையும் ஒன்றாக கலந்து முடி முழுவதும் மசாஜ் செய்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசவும்.   

Also Read | உணவே மருந்து: மழை, குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா..!!!

வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றைக் கொண்டு கலவையை உருவாக்கவும்

வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் கலந்த கலவை குளிர்காலத்தில் முடி வறண்டு போகாமல் பாதுகாக்க பயன்படும். வாழைப்பழங்களை பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு எண்ணெயுடன் தயிர் மற்றும் தேனை கலக்கவும். இந்தக் கலவையை தலைமுடியில் நன்கு தடவி, நெருக்கமான பல் கொண்ட சீப்பால் தலையை நன்றாக சீவிவிடவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூவால் முடியை அலசுங்கள்.  

இப்படி அவ்வப்போது செய்துவந்தால், பளபளப்பும் முடி, குளிர்காலத்திலும் கிடைக்கும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News