நீங்கள் வாங்கும் முட்டை பிரஷ்ஷானது தானா... அடையாளம் காணுவது எப்படி!
பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. அசைவம் சாப்பிடாதவர்கள் பலரும் கூட முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள்.
முட்டை, ஏழை எளிய மக்களின் வாழ்வோடு தினசரி கலந்திருக்கும் ஒரு உணவு என்றால் மிகையில்லை. பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. அசைவம் சாப்பிடாதவர்கள் பலரும் கூட முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் கிரகித்துக் கொள்ளக்கூடிய சிறந்த புரதச்சத்து சுமார் ஆறு கிராம் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் பாதுகாக்கும். முட்டையை அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், நமக்கு சந்தையில் கிடைக்கும் முட்டைகள் பிரெஷ்ஷானவை தானா என அறிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால், பிரஷ்ஷான முட்டை சாப்பிட்டால் தான் அதிகபட்ச ஆரோக்கிய பலனை அடையலாம். அதோடு தற்போது சந்தையில் கலப்படம் மற்றும் போலி பொருட்களை விற்பனை செய்யும் வணிகமும் செழித்து வருகிறது. பல வர்த்தகர்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகின்றனர். போலி அல்லது பழைய முட்டைகளும் சந்தையில் கிடைக்கின்றன.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
எல்லாவற்றிற்கும் காலாவதி தேதி உள்ளது, காலாவதியான பிறகு அதைப் பயன்படுத்துவது சரியல்ல. இதனால் நன்மைகள் கிடைக்காததோடு மட்டுமின்றி, ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம். நீங்கள் சந்தைக்கு செல்லும் போதெல்லாம், எச்சரிக்கையுடன் முட்டைகளை வாங்கவும். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். புதிய பிரெஷ்ஷான முட்டைகள் மற்றும் பழைய முட்டைகளுக்கு இடையிலான வேறுபாட்டை நீங்கள் அடையாளம் காணக்கூடிய சில எளிமையான வழிகள் உள்ளன.
புதிய மற்றும் பழைய முட்டைகளை கண்டறியும் முறைகள்:
1. ஓடுகளை கவனமாக சோதிக்கவும்
பல கடைக்காரர்கள் பழைய முட்டை பிரெஷ்ஷாக தெரிவதற்கு வண்ணம் பூசுகிறார்கள். ஆனால் புதிய அல்லது பழைய முட்டையை ஒருவர் கூர்ந்துபார்த்து கண்டுபிடிக்க முடியும். முட்டையின் ஓட்டை கூர்ந்து பார்த்து அது வெடிக்கவில்லை என்பதையும், அதன் ஓடுகள் உதிர்ந்துவிடாமல் இருக்கிறதா என்பதையும் கவனமாகப் பார்க்க வேண்டும்.
2. வாசனையின் மூலம் சோதனை
சந்தையில் கிடைக்கும் முட்டைகள் புதியதா இல்லையா என்பதை வாசனையின் மூலமும் கண்டறிய முடியும். முதலில் ஒரு முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் பிறகு அதன் வாசனை பார்க்கவும். அழுகல் நாற்றம் வீசினால், அதை சாப்பிட முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
3. காலாவதி தேதியை சரிபார்க்கவும்
இப்போதெல்லாம், பேக் செய்யப்பட்ட முட்டைகள் சூப்பர் மார்க்கெட் அல்லது பெரிய கடைகளில் சிறிய பேக்குகளில் காணப்படுகின்றன, அதில் காலாவதி தேதி எழுதப்பட்டுள்ளது. எனவே அவற்றை வாங்கும் போது இந்த தேதியை சரிபார்க்கவும். அவசரத்தில் வாஙக்க் கூடாது. இந்த முட்டைகளை எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ