மைக்ரேன் தலைவலியில் இருந்து விடுதலை வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
Migraine Headaches Tips: பலருக்கு அவ்வப்போது தாங்க முடியாத தலைவலி ஏற்படும். இதை சரிசெய்ய, சில இயற்கையான மருத்துவ முறைகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Migraine Headaches Tips Tamil: ஒரு சிலருக்கு, தொடர்ந்து சில நாட்களுக்கு அதீத தலைவலி வரும். தலைவலியுடன் சேர்த்து குமட்டல் போன்ற உணர்வு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை மைக்ரேன் தலைவலி என கூறுவர். இந்த தலைவலி, பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெரும்பாலும் பெண்களுக்குதான் இந்த தலைவலி பாடாய் படுத்துமாம். அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
மைக்ரேன் தலைவலி என்றால் என்ன?
உலகளவில், 50 சதவிகிதம் பேர் தலைவலி மற்றும் அதை சார்ந்த பிரச்சனைகளினால் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மைக்ரேன் தலைவலி வந்தால், தலையே வெடிக்கும் அளவிற்கு வலிக்கும். இதை, நாள்பட்ட நரம்பியல் வியாதி என மருத்துவர்கள் கூறுகின்றனர். மைக்ரேன் தலைவலி வந்தால், ஒரு சிலருக்கு 24 மணி நேரம் வரை நீடிக்கும். ஒருசிலருக்கு, 2 முதல் 3 நாட்கள் வரை கூட நீடிக்கும். அதிகபட்சமகா விட்டு விட்டு 15 நாட்கள் வரை இந்த தலைவலி தொடரும். இதை வீட்டு வைத்தியங்களை வைத்து எளிதில் தீர்க்கலாம். எப்படி தெரியுமா?
நீர்ச்சத்து:
உடலில் நீர்ச்சத்தினை தக்கவைத்து கொள்வது, தலைவலியை நீக்குவதற்கு சிறந்த வைத்தியமாக இருக்கும். நீர்சத்திற்கும் தலைவலிக்கும் பல சம்பந்தங்கள் உள்ளது. இதை சில மருத்துவ ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. அதனால், நன்றாக தண்ணீர் குடித்து, உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் மட்டுமல்ல, ஜூஸ், பழங்கள் மூலமாகவும் நீர்ச்சத்தினை உடலில் தக்க வைத்துக்கொள்ளலாம். அதனால், உடலில் தண்ணீர் அளவினை அதிகரித்தால், தலை வலியை நீக்கலாம்.
நல்ல தூக்கம்:
மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களில் ஒன்று, நல்ல தூக்கம். இதை எப்போதும் முதன்மை படுத்த வேண்டும். சிலருக்கு தூக்கமின்மையினால் கூட அதிக தலைவலி வரும். அனைவரும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியமாகும். அதனால், கண்டிப்பாக நல்ல தூக்கத்திற்கான அட்டவணையை உருவாக்கி, நன்றாக தூங்கினால் தலைவலி விலகும்.
அக்குபஞ்சர்:
அக்குபஞ்சர் என்பதை குத்தூசி மருத்துவம் என கூறுவர். இதனால் உடலில் பல்வேறு மருத்துவ நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த மருத்துவ முறையினல் உடல் ரிலாக்ஸ் ஆகி, நரம்பியல் பிரச்சனைகள் சரியாகும். இந்த மருத்துவ முறையை விரல்கள், கை பாதம், கால் பாதம் ஆகியவற்றில் அழுத்தம் கொடுத்து செய்வர். தலைவலிக்கான பிரத்யேக அக்குபஞ்சர் முறைகளும் உள்ளன. அதை செய்து, தலைவலியை சரிசெய்து கொள்ளலாம்.
மசாஜ்:
மசாஜ்களுக்கு பல மருத்துவ நன்மைகள் உள்ளன. தலையில் மசாஜ் செய்து கொள்வது, தலைவலியை சரிசெய்ய உதவும், இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வளர்ச்சிக்கும் உதவும். பிரத்யேக எண்ணெய்கள், அல்லது தைலங்களை உபயோகிக்கலாம். இதனால் தாங்கமுடியாத தலைவலியை கட்டுப்படுத்தலாம்.
மருத்துவரை அணுகுவது நல்லது..
மேற்கூறிய விஷயங்களை செய்வதற்கு முன்னர் மருத்துவரை அணுகுவது நல்லது. இதை செய்த பிறகும், தலைவலி சரியாகவில்லை என்றால் அதற்கான தீர்வு என்ன என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எகிறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் பழங்களின் தோல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ