பச்சை மிளகாய் எந்தளவிற்கு காரமாக இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் உடலுக்கு தேவையான அதிக சத்துக்களும் நிறைந்துள்ளது.  இதில் வைட்டமின்-சி சத்து உள்ளது, மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.  ஆனால் அந்த பச்சை மிளகாயை நம்மால் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது பச்சை மிளகாயை என்னதான் ப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்தாலும் கூட அவை சில தினங்களில் அழுகி போய்விடும், இதனால் பச்சை மிளகாயை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்துக்கொள்ள முடியாமல் இல்லத்தரசிகள் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.  பெரும்பாலான இந்திய உணவுகளில் பச்சை மிளகாய் அதிகம் சேர்க்கப்படுகிறது, இது உடனடியாக கெட்டுபோய்விடுவதால் இதனை சேமித்து வைக்கமுடியாமல் அடிக்கடி கடைக்கு சென்று வாங்கும் நிலைமை ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாக நேரிடுகிறது.  தற்போது சில  வழிமுறைகளை பின்பற்றி பச்சை மிளகாயை எப்படி ஒரு மாத காலம் வரையிலும் கெடாமல் வைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி இங்கே விரிவாக காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


முதலில் நன்கு புதிதாக இருக்கும் பச்சை மிளகாய், வீணாப்போன பச்சை மிளகாய் என தனித்தனியே தரம் பிரித்து கொள்ள வேண்டும்.  இப்போது அதனை சுத்தமாக கழுவி காற்றுபுகாத பாட்டிலில் ஒன்றின் அடியில் டிஸ்யூ பேப்பரை வைத்து அதன்மீது பச்சை மிளகாயை வைத்து, மேற்பரப்பில் மற்றொரு டிஸ்யூ பேப்பரை வையத்து இறுக்கமாக மூடிவிட வேண்டும்.  பச்சை மிளகாயை இப்படி நீங்கள் பாதுகாத்து வந்தால் ஒரு மாதம் வரையிலும் கெட்டுப்போகாமல் புதிது போன்றே வைத்திருக்கலாம்.  அதேசமயம் வாரத்திற்கு ஒரு முறை பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் டிஸ்யூ பேப்பரை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  பச்சை மிளகாய் மட்டுமல்ல இதே முறையை பயன்படுத்தி நீங்கள் புதினா இலைகள், கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி போன்ற எளிதில் கெட்டுப்போகும் பொருட்களையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.


பச்சை மிளகாயை கெட்டுப்போகாமல் பாதுக்காக்க மற்றொரு வகை இருக்கிறது, இதனை செய்ய நல்ல நிலையிலுள்ள பச்சை மிளகாய்களை தரம் பிரித்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.  பின்னர் அதனை சுத்தமாக கழுவியெடுத்து வைத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இப்போது அந்த அரைத்தெடுத்த பச்சை மிளகாய் பேஸ்ட்டை ஒரு ட்ரேயில் மாற்றிக்கொள்ள வேண்டும், பின்னர் உணவு பொருட்களை மூட பயன்படுத்தப்படும் க்ளிங் பிலிம் எனும் பேப்பரை கொண்டு அந்த ட்ரேயை மூடி வைத்துவிட வேண்டும்.  பச்சை மிளகாய் பேஸ்ட் உள்ள இந்த ட்ரேயை ஃப்ரிட்ஜில் குறைந்தது ஒரு இரண்டு மணி நேரத்திற்கு வைத்து கூல் செய்யவேண்டும்.  பின்னர் அதனை எடுத்து ப்ரீசர் சேப் பையில் காற்றுபுகாமல் வைத்துவிட வேண்டும்.  இப்படி நீங்கள் செய்தால் நீண்ட நாட்களுக்கு பச்சை மிளகாயை கெட்டுப்போகவிடாமல் புதிதானது போல பயன்படுத்திக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ