மாரடைப்பு போல் கிட்னி பிரச்சனையும் சர்வ சாதாரணமாகிவிட்டது. சிறு குழந்தைகள் கூட கிட்னி பிரச்சையனால் சிகிச்சை பெற்று வருவதை மருத்துவமனைகளில் பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேறாமல் சிறுநீர் பாதைகளில் தங்குவதால் கிட்னி பிரச்சனைகள் (Kidney Stones) ஏற்படுகின்றன. குறிப்பாக, கிட்னி கற்கள் உருவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இடுப்பு பகுதிகளில் கடினமான வலி இருக்கும். உடனடியாக கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இல்லையென்றால் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதேநேரத்தில், முன்னெச்சரிக்கையாக இருந்தால், இத்தகைய தொந்தரவுகளை நீங்கள் எதிர்கொள்ளவேண்டிய தேவையே இருக்காது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறீர்களா? இதோ உங்களுக்கான 5 டிப்ஸ்.


1. மக்னீசியம்


மக்னீசியம், உடலை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதற்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கால்சியம் கற்கள் உருவாவதை தடுப்பதில் மக்னீசியம் மூளையாக செயல்படுவதால், மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாது. அந்தவகையில், பருப்பு வகைகள், வெண்ணெய், அவக்கோடா ஆகிவற்றை தினசரி உணவில் எடுத்துகொள்ளலாம். மக்னீசியம் நிறைந்த உணவுகள் ஆக்சலேட்டுகள் குடலில் உறிஞ்சுவதைத் தடுத்து, சிறுநீரக கற்கள் உருவாதையும் தடுக்கின்றன.


ALSO READ |  ஆண்களே உஷார்: 30 வயசாயிடுச்சா? இந்த பிரச்சனைகள் படையெடுக்கும் நேரம் இது


2. கால்சிய உணவுகள்


உணவில் இருக்கும் கால்சிய படிகங்கள், முறையாக சிறுநீர் வழியாக வெளியேறாதபோது, சிறுநீரக கற்கள் உருவாவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால், கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, பால், பாலடைக்கட்டி, தயிர் போன்றவைகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இதனை அன்றாட டையட்டில் சேர்த்துக்கொண்டால், கால்சிய படிகங்கள் சிறுநீர் பாதையில் தங்காமல், சிறுநீருடன் சேர்ந்து வெளியேறிவிடும்.


3. சிட்ரிக் அமில உணவுகள்


சிட்ரிக் உணவுகள் சிறுநீர் பாதையில் தேங்கும் படிகங்களை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. எலுமிச்சை பழம், ஆரஞ்சு, திராட்சை பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்து இருக்கின்றன. அந்த வகை உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர் பாதையில் தேங்கியிருக்கும் கால்சியம் ஆக்சலேட்டுகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. இதன் மூலம் சிறுநீரக கற்கள் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.


ALSO READ |  High Risk Foods: குழந்தைகளுக்கு அதிக ஆபத்தான உணவுகள்! கண்டிப்பாக தவிர்க்கவும்!


4. குறைவான உப்பு 


சிறுநீரில் கால்சியம் வெறியேறுவது அதிகரிக்கும்போது, உங்கள் டையட்டில் உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகளை குறைக்க வேண்டும். இந்த உணவுகள் சிறுநீர் மூலம் கால்சியம் வெறியேற்றத்தை அதிகரித்து சிறுநீர் கற்கள் உருவாக காரணியாக இருக்கின்றன. இதில் கவனம் செலுத்தும்பட்சத்தில் சிறுநீர்கற்கள் உருவாவதில் இருந்து தப்பிக்கலாம். மட்டனில் இருக்கும் பியூரின்கள், யூரிக் அமில கற்களை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மட்டனை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.


5. அதிக நீர் அருந்துதல்


உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. அதனால், உடலில் எப்போதும் நீர் பற்றாக்குறை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகளவு நீர் அருந்துதல் அல்லது பழச்சாறை பருகி வந்தால், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகாது. சோடா, செயற்கை இனிப்பு சுவையூட்டப்பட்ட பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


ALSO READ |  ஏன் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR