புதுடெல்லி: கொரோனா நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேக புயலால் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், சுகாதார சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ள்ளது.


இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தீவிர கலந்தாலோசனைகளுக்குப் பிறகு முக்கியமான முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, பயிற்சி பெறும் மருத்துவர்கள், இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள் ஆகியோரும் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடலாம்.  


Also Read | உலகிலேயே அதிக செலவு பிடித்த விவாகரத்துகளில் ஒன்று Bill and Melinda divorce


கொரோனாவின் தாக்கத்தால், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.


இதன்படி, பயிற்சி பெறும் மருத்துவர்கள், இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள் ஆகியோரும் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


லேசான கொரோனா பாதிப்புகள் உள்ளவர்கள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கவும் மூத்த மருத்துவர்கள் மேற்பார்வையில் மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் செயல்பட வேண்டும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc), GNM- General Nursing & Midwife பட்டம் பெற்ற மருத்துவ பணியாளர்களும், மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  


ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR