அன்னாசிப்பழம் சாப்பிட சரியான நேரம் எப்போது? இந்த கேள்விக்கான பதில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, மாங்கனீஸ், வைட்டமின் பி6, தாமிரம், தியாமின், ஃபோலேட், பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், பாந்தோதெனிக் அமிலம், ரிபோஃப்ளேவின் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நன்மைகள் அனைத்தையும் பெற, இந்தப் பழத்தை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற மிக முக்கியமான கலவை உள்ளது, இது புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது.



அன்னாசிப்பழம் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, மேலும் அவை அறுவை சிகிச்சை நோயாளிகளின் புண்கள் ஆற அன்னாசிப்பழம் உதவும். செரிமானத்திற்கும் உதவும் அன்னாசி எனப்படும் பைனாப்பிள் பழம், தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.


மேலும் படிக்க | நரை முடிக்கு இனி கெமிக்கல் ஹேர் டை வேண்டாம், இந்த இயற்கை வைத்தியம் போதும்


அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துக்கள்


நார்ச்சத்து, வைட்டமின் சி, மாங்கனீஸ், வைட்டமின் பி6, தாமிரம், தியாமின், ஃபோலேட், பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், பாந்தோதெனிக் அமிலம், ரிபோஃப்ளேவின் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. மேலும், பாஸ்பரஸ், துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் கே ஆகியவையும் உள்ளன.


அன்னாசிப்பழத்தின் நன்மைகள் என்ன?
அன்னாசிப்பழம் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் முக்கியமானது மற்றும் உங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கலாம்.



அன்னாசிப்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும், இது இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.


மேலும் படிக்க | 40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க ‘இவற்றை’ உணவில் சேர்க்கவும்!


அன்னாசிப்பழம் மற்றும் அதன் சேர்மங்களான ப்ரோமைலைன், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் என்று குறிப்பிடுகின்றன. அன்னாசிப் பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.


அன்னாசிப்பழத்தின் பக்க விளைவுகள் என்ன?
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க அன்னாசிப்பழத்தை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். ப்ரோமிலைன் அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்தப் பழத்தை சாப்பிட்டால், நாக்கில் எரிச்சல், அரிப்பு மற்றும் குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு அன்னாசிப்பழம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சிலர் அறிவுறுத்துகின்றனர். மிகவும் சூடான தன்மை கொண்ட அன்னாசியை அதிகம் சாப்பிட்டால், உடலில் சூடு அதிகரிப்பதோடு, கரு கலையலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அதேபோல, முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.


அன்னாசிப்பழம் சாப்பிட சரியான நேரம் எப்போது?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அன்னாசிப்பழத்தை காலை உணவில் அல்லது மாலை நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அதாவது வயிறு ஓரளவு காலியாக இருக்கும்போது உண்பது நல்லது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை காணாமல் போய்விடும்: சூப்பரான டிப்ஸ் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ