Yoga Asanas For Back Pain Relief: தாங்க முடியாத இடுப்பு வலி இருந்தால் யோகாசனம் செய்து பார்க்க சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். யோகாசனம், உடலை உறுதியுடன் வைத்துக்கொள்ளவும், உடலுக்கு வலு சேர்க்கவும் உதவுகிறது. இது, உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்யும் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. 2017ஆம் ஆண்டு, முதுகு வலிக்கு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களை வைத்தும், மருந்துகள் எடுத்துக்கொள்ளாதவர்களை வைத்தும் ஒரு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களை விட, யோகா செய்பவர்கள் சீக்கிரமே முதுகு வலியில் இருந்து மீண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், முதுகு வலிக்கான யோகாசனங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதோ முக்கா ஸ்வானாசனா-Adho Mukha Svanasana:


இந்த யோகாசனத்தால் ஒட்டுமொத்த உடலை நன்கு நீட்டிக்க முடியும். குறிப்பாக இதனால் முதுகு நன்றாக விரியும். இந்த யோகாசனத்தால் முதுகெலும்பு வலுவடைந்து, ஹெவியான பொருட்களையும் தூக்கும் அளவிற்கு வலு கொடுக்கும். இதனை செய்ய, முதலில் உங்கள் கைகளை தோள்பட்டைக்கு நேராக தரையில் வைக்க வேண்டும். மெதுவாக முட்டியை தரையில் இருந்து நீக்க வேண்டும். அப்படியே இடுப்பை நீட்ட வேண்டும். பின்பு மெதுவாக இறக்க வேண்டும். இப்படியே செய்யும் போது சரியாக மூச்சு விட வேண்டும். இவ்வாறு 5 முதல் 7 முறை வரை செய்யலாம். 


பாலாசனா-Balasana:


இந்த ஆசனத்தை ஆங்கிலத்தில் child's pose என்று கூறுவர். இதுவும் உங்கள் முதுகு மற்றும் இடுப்பு பகுதிக்கு நன்மை சேர்க்கும் ஒரு ஆசனமாகும். இதை செய்ய முதலில் உங்கள் கைகளை நன்றாக முன்னால் நீட்டி, முதுகை வலைத்து படுக்க வேண்டும். உங்களது பின்பகுதி, கணுக்கால்லில் படுமாறு படுக்க வேண்டும். இப்படியே ஐந்து முதல் பத்து முறை மூச்சை இழுத்து விடவும். இது, உங்கள் முதுகு வலியை நீக்க உதவும். 



மேலும் படிக்க | செவ்வாழையை சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது! ஏன் எப்படி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!


ஏக படா ராஜகபடோசனா- Eka Pada Rajakapotasana:


யோகாசனத்தை முதன் முறையாக செய்பவர்களுக்கு இந்த யோகா கொஞ்சம் கடினமாக தோன்றலாம். எனவே இதை செய்கையில் கவனம் தேவை. சமயங்களில் இடுப்பு பகுதி இறுக்கமாக இருப்பதால் கூட இடுப்பில் வலி ஏற்படும் அதற்கு தீர்வாக அமைகிறது இந்த ஆசனம். இதை செய்ய, நாய் போல தரையில் இருக்க வேண்டும். பின்னர், உங்கள் இடது காலை முன்னாள் மடக்கி வைத்து அமர வேண்டும். உங்களது இடது காலை பின்புறமாக நேராக நீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி சிறிது நேரம் இழுத்து மூச்சு விட வேண்டும். பின்பு, இன்னொரு காலை மடக்கி வைத்து இந்த ஆசனத்தை செய்யலாம். 


ட்ரிகோனாசனா-Trikonasana:


இதை முக்கோண வடிவில் செய்ய வேண்டும். இதனால் உங்களது பின்பகுதி, கால்கள் ஆகியவை வலுவாகும். இடுப்பின் இரண்டு பக்கங்களில் இருக்கும் தசைகளை கூட இது குறைக்க உதவும். முதலில் இரு கால்களை வைத்தும் நேராக வைக்க வேண்டும் பின்னர், இடது காலை 3 முதல் நான்கு அடி தள்ளி வைக்க வேண்டும். உங்கள் மார்பக பகுதியை இடது பக்கமாக சாய்த்து கையால் அந்த காலை தொட வேண்டும். அப்படி தொடுகையில், உங்களது இன்னோரு கை மேல்நோக்கி நீளமாக இருக்க வேண்டும். இப்படியே இரு பக்கமும் மாறி மாறி செய்யலாம். 


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நோய்களை அடித்து விரட்டும் டிராகன் பழ ஜூஸ்... புற்றுநோய் முதல் சுகர் வரை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ