Yoga Asanas For Back Pain Relief: நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து, பலர் வேலை பார்க்கின்றனர். இதனால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்ற வலிகள் ஏற்படலாம். அதிலும், 8 மணி நேரம் தொடர்ந்து சேரில் அமர்ந்து கம்ப்யூட்டரின் முன்பு வேலை பார்ப்பவர்களுக்கு தாங்க முடியாத கழுத்து வலி ஏற்படலாம்.
ஒரே பக்கமாக படுத்து தூங்குவதனாலும், ஹெவியான நகைகளை அணிவதாலும், மன அழுத்தத்தாலும் கூட கழுத்து வலி ஏற்படும். இது, சரியான நேரத்தில் சிகிச்சையுடன் தீர்க்கப்படவில்லை என்றால், பெரிய பிரச்சனையில் போய் முடிந்து விடும். அதனால், தீவிர கழுத்து வலி இருந்தால், அதை கண்டிப்பாக மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை நிவர்த்தி செய்ய, சில யோகாசனங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
உத்தாசனா (uttanasana):
நின்று கொண்டு முன் குணிந்து செய்யும் யோகாசனத்திற்கு, உத்தாசனா என்று பெயர். இந்த யோகாசனத்தை பலர் வர்க்-அவுட் பழக்கத்திலும் சேர்த்துக்கொள்வர். இது, தசைகளை நீட்டிப்பதற்கும், பின்புறத்தில் இருக்கும் தசைகளுக்கு வலி கொடுக்கவும் உதவும். வயிறு தசைகளையும் ஸ்மூத் ஆக்கவும் உதவும். இது, தோள்பட்டையை ரிலாக்ஸ் செய்து கழுத்து வலியையும், அசௌகரியமான உணர்வையும் நீக்க உதவும்.
வீரபத்ராசனா (virabhadrasana)
சமஸ்கிருதத்தில் இருந்து வந்த வார்த்தை, வீரபத்ராசனா. நின்று கொண்டே செய்யும் இந்த யோகாசனத்தால் கால்கள், உடற்பகுதி, தோள்பட்டை, மார்பு பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதி என அனைத்து தசைகளும் பலன் பெறும். இது, கழுத்து தசைகளில் ஏற்படும் வலியையும் நீக்கும்.
சக்ரவக்ராசனா (chakra vakrasana):
சக்ரவக்ராசனா என்பது, ஆங்கிலத்தில் cat-cow pose என குறிப்பிடுவர். இந்த ஆசனத்தில் முதுகு எலும்பில் ஏற்படும் வலியை நீக்கலாம். இது முதுகு மற்றும் கழுத்து வலியை நீக்குவது மட்டுமன்றி, முதுகு எலும்பை நீட்டிக்கவும் உதவும். இதனால் உடலும் ஃப்ளெக்சிபிலாக இருக்கும்.
ட்ரிகோனாசனா (trikonasana):
இந்த ஆசனத்தை உத்திட்டா ட்ரிகோனாசனா என கூறுவர். இந்த ஆசனத்தை நின்று கொண்டு செய்ய வேண்டும். உடலில் இருக்கும் வேர் சக்கரத்தை சீர் செய்ய உதவும். மேலும், இதயத்தை சுற்றி இருக்கும் தசைகளை பாதுகாக்கவும் ட்ரிகோனாசனா யோகாசனம் உதவும். இந்த ஆசனம், கழுத்து மற்றும் முதுகு பகுதிகளை சுற்றி இருக்கும் தசைகளை பலப்படுத்தவும் உதவும். இதனால் கழுத்து வலி சரியாகும்.
மேலும் படிக்க | தனியாவின் தனித்துவமான நன்மைகள்: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு
புஜங்காசனா (bhujangasana):
இந்த யோகாசனத்தை குறைவாக குணிந்து கொண்டு யோகா செய்ய வேண்டும். இதனை ஆங்கிலத்தில் sphinx pose என்று குறிப்பிடுவர். முதுக்கை, சிறிய அளவில் குறைவாக முறுக்கி, இந்த யோகாசனத்தை செய்ய வேண்டும். இந்த யோகாசனத்தை முதுகு மற்றும் கழுத்து வலியை நீக்குவதற்கு செய்யலாம்.
யோகாசனங்களால் ஏற்படும் நன்மைகள்:
>யோகா, பலத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும்.
>பின்பக்கம் முதுகு, கழுத்து வலிகளை நீக்கும்.
>கீல்வாத நோய் பாதிப்புகளை நீக்கும்.
>இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
>உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும்.
>நல்ல தூக்கத்திற்கு உதவும்
>மன அழுத்தத்தை போக்கி, உடலுக்கு அதிக ஆற்றலை கொடுக்கும்.
>மன நிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்
>தன்னலத்தை பாதுகாக்க உதவும்
மேலும் படிக்க | படுக்கையறை வாழ்க்கையை சுவையாக மாற்ற...‘இந்த’ 5 உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ