White Hair Remedies: இயற்கையாகவே நரை அல்லது வெள்ளை முடியை வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம். வெள்ளை முடி அழகு ஆர்வலர்களுக்கு மற்றொரு கவலையாக உள்ளது. இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடுகிறது.  மேலும் முடி நரைப்பது வைட்டமின் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் பிற காரணிகளால் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை நரை முடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க பல வழிகள் இருந்தாலும், ரசாயனங்கள் இல்லாமல் வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்ய முடியும்.  வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எந்தவித பக்க விளைவுகள் இல்லாமல் முடியை கருப்பாக மாற்றலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!


நரை முடி வருவதற்கான காரணம்?


மரபியல், மன அழுத்தம் காரணமாகவும் வெள்ளை முடி பிரச்சனை ஏற்படுகிறது. ‘மெலனின்’ எனும் நிறமிதான் நமது தோலின் நிறத்தை முடிவு செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகியவை நமது முடியை கருப்பாக வைத்திருக்க உதவுகின்றன. இவற்றின் உற்பத்தி குறையும் பொது முடியின் நிறம் மாறுகிறது.  40 முதல் 50 வயதில் நரை முடி தோன்றுவது நார்மலான ஒன்று.  ஆனால், தற்போது இளம் வயதினர் பலருக்கும் வெள்ளை முடி பிரச்சனை உள்ளது.  இதனை சரி செய்ய பல ஆயிரங்களையும் செலவு செய்கின்றனர்.  பெண்களை விட ஆண்களுக்கே இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது.


இயற்கையான முறையில் முடியை கருப்பாக மாற்றுவது எப்படி?


நெல்லிக்காய் மற்றும் மருதாணி: பொதுவாக நரைமுடியை சரிசெய்ய வெள்ளிக்காய் உதவுகிறது. பண்டைய காலங்களில் இருந்தே முடிக்கு மருதாணியை தேய்த்து வருகின்றனர். இது தலைக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து தினசரி தடவி வந்தால் முடி இயற்கையாகவே கருப்பாக மாறும். 


வெங்காய சாறு: வெங்காயத்தில் பல இயற்கையான நன்மைகள் உள்ளன. முடியை கருப்பாக மாற்றுவதற்கும் இவை உதவுகிறது.  வெங்காயத்தை நன்கு அரைத்து அந்த சாற்றை தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.  வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் நரை முடி பிரச்சனை முற்றிலும் சரி ஆகும். அதே போல பிரியாணி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தொடர்ந்து முடியை கழுவி வந்தாலும் நரை முடி பிரச்சனை சரி ஆகும்.  


தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு: தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடியில் தடவி வந்தால் நரை முடி பிரச்சனை சரி ஆகும். இந்த கலவையை முடியின் வேர் முதல் நுனி வரை படுமாறு தடவவும். 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஊற வைத்து ஷாம்பு கொண்டு தடவவும்.  மேலும் வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள் அதிகமாக எடுத்து கொண்டால் வெள்ளை முடி பிரச்சனையை வரமால் தடுக்கலாம். இந்த உதவிக்குறிப்புகளை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பிரச்சனை சரியாக வாய்ப்புள்ளது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!