அதிகரிக்கும் உடல் எடை தற்போது அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாகி விட்ட நிலையில், பலர் பலவிதமான டயட்டுகளை பின்பற்றி தங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் பேலியோ டயட். அந்த பேலியோ டயட் காரணமாக, சின்னத் திரை  நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியா உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரியா கடந்து சில மாதங்களாகவே சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும், பேலியோ டயட் பின்பற்றியதால், அவரது நீரிழிவு நோய் தீவிரமடைந்து விட்டது எனவும் கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், இன்று உயிரிழந்துள்ளார். முன்னதாக,  உடல்நிலை மோசமாகியதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நாட்களாக கோமாவிலேயே இருந்து வந்துள்ளார். 


 


கற்கால உணவுகளை  அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது பேலியோ டயட்.  இந்த டயட்டில் காய்கறிகள்,  உலர் பழங்கள், வேர்கள், இறைச்சி (ஈரல், மூளை) ஆகியவை அடங்கும். இதில் பால் சார்ந்த உணவுகள், தானியங்கள், பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, உப்பு, காபி மற்றும் மது ஆகியவை இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. பேலியோ  டயட்டில்  சிறுதானியங்கள் அவசியமற்றவை என கூறப்படுகிறது. ஆதிகால மனிதர்கள், இறைச்சியை மட்டுமே உண்டார்கள் என்பது பேலியோ டயட்டை  ஊக்குவிப்பவர்கள் கூறும் வாதம். அவர்கள் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், கார்போஹைட்ரேட், கொழுப்பு இரண்டுமே ஓரளவுக்கு உடலுக்கு தேவை என்பதை மறந்து விடக் கூடாது. இவை அளவுக்கு அதிகமாக போகும் போது தான் பிரச்சனையே தவிர, சரியான அளவு உட்கொண்டால் எந்த வித பிரச்சனையும் இல்லை. 


மேலும் படிக்க | காவு வாங்கிய பேலியோ டயட்?... நடிகர் பரத் கல்யாண் மனைவி மரணம்


இந்த பேலியோ உணவு முறையை மருத்துவர் கண்காணிப்பில் பின்பற்றுவது தான் சிறந்தது. தன்னிச்சையான முடிவுகள் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  இந்த டயட்டை பின்பற்றும் போது,  எடை குறைவதை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கக்காமல்,  உடல் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்துவர வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  பேலியோ உணவு முறை குறித்து பெரிய அளவு ஆய்வுகள் நடப்பதில்லை. மேலும், ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் பேலியோ உணவு முறையில் இருக்கலாமா என்பதும் விவாதத்துக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


பரத் கல்யாண் - பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில், 43 வயதே ஆன பிரியாவின் திடீர் மரணம் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 


மேலும் படிக்க | திகட்ட திகட்ட காதலிப்போம் - மீண்டும் நா. முத்துக்குமார்... பாடலாகின கவிதை வரிகள்


மேலும் படிக்க | வாரிசு படத்தால் சிக்கித்தவிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ