நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற 5 டயட் உணவுகள்
Food For Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது இனி எளிது, தினசரி உணவில் இந்த 5 விஷயங்களை சேர்த்துக் கொண்டால் போதும்.
நீரிழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அவரது வாழ்க்கை முறை மிகவும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயை வேரிலிருந்தே ஒழிப்பதற்கான வழியை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு தொடர்பான பிற நோய்களின் அபாயத்தை நாம் குறைக்கலாம். எனவே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படும் 5 டயட் உணவவுகள் என்னவென்று கூறியுள்ளார்.
டைப் 2 சர்க்கரை நோயாளிகள் இவற்றை உட்கொள்ள வேண்டும்
1. வேகவைத்த முட்டை:
முட்டையை வேகவைத்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியமான வழியாகும், இதில் ஆம்லெட் போன்ற எண்ணெயைப் பயன்படுத்த தேவையில்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலின் அளவை எண்ணெய் அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் முட்டையை ஆம்லெட் வடிவில் உட்கொள்ளாமல் வேகவைத்து சாப்பிடவும்.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
2. ராகி தோசை:
அரிசியால் செய்யப்பட்ட தோசை, நீங்கள் நிறைய சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் ராகி தோசை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த தோசை சிறந்த டயட் உணவாகும்.
3. கற்றாழை சாறு:
சரும தோலின் அழகை அதிகரிக்க கற்றாழை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதன் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். இதற்கு கற்றாழை ஜெல், வறுத்த சீரகம், சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
4. நெளிகோதுமை:
நெளிகோதுமை என்பது பசையம் இல்லாத தானியமாகும், இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் ஏராளமாக உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாகும். பொதுவாக வட மாநிலங்களில் நவராத்திரி விரதத்தின் போது நெளிகோதுமையை சப்பாத்தி வடிவில் சாப்பிடுவது வழக்கம் உண்டு.
5. கருப்பு கொண்டைக்கடலை:
கருப்பு கொண்டைக்கடலை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பலாப்பழம் உண்ட பின் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ