பாலுடன் நெய், மஞ்சள் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் அட்டகாசமான 7 நன்மைகள்
Health Benefits of Turmeric Milk: ஆயுர்வேதத்தில், மஞ்சள், பால் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த கவலையாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமல்லாமல், இன்னும் பல சிறந்த நன்மைகளும் கிடைக்கின்றன.
Health Benefits of Turmeric Milk: பலருக்கு தினமும் தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் உள்ளது. இது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. ஆனால் பாலில் நெய் அல்லது மஞ்சள் கலந்து குடித்தால், இதன் ஆரோக்கிய நன்மைகள் பன்மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத பலன்கள் கிடைக்கும்.
ஆயுர்வேதத்தில், மஞ்சள், பால் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த கவலையாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமல்லாமல், இன்னும் பல சிறந்த நன்மைகளும் கிடைக்கின்றன. பாலில் மஞ்சள் மற்றும் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
1. மூளையை கூர்மையாக்கும்
நெய் மற்றும் மஞ்சள் கலந்து பால் குடித்தால் மூளை ஆரோக்கியம் மேம்படுகிறது. முக்கிய முடிவெடுப்பது, சிந்தனை போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளை இது மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் குர்குமின் நிறைந்த இந்த பால், மனத் தெளிவு, கவனம் மற்றும் நினைவாற்றலை ஆதரித்து ஞாபக சக்தியையும் (Memory Power) மேம்படுத்துகிறது.
2. நச்சுகளை நீக்கும்
பாலுடன் நெய் மற்றும் மஞ்சள் கலந்து உட்கொள்வது கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இணைந்து கல்லீரலை சுத்தப்படுத்தி நச்சு நீக்கத்தை (Detox) ஊக்குவிக்கின்றன.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நெய் மற்றும் மஞ்சள் கலந்த பால் உடலில் இயற்கையான வழியில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பலப்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பால், உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.
மேலும் படிக்க | Brain Health: 80+ வயதிலும் மூளை ஜெட் வேகத்தில் இயங்க... நீங்க செய்ய வேண்டியவை
4. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது
பாலில் சேர்க்கப்படும் நெய் ஹார்மோன் (Hormone Balance) உற்பத்தி மற்றும் சமநிலையை சீராக வைக்க உதவுகிறது. அதன் ஆரோக்கியமான கொழுப்புகளுடன், இது நாளமில்லா அமைப்பை ஆதரிக்கிறது. மஞ்சள் ஹார்மோன் தொடர்பான வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
5. மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பாலில் நெய் மற்றும் மஞ்சள் சேர்த்து குடிப்பதால் மூட்டு வலி (Knee Pain) மற்றும் வீக்கம் குறையும். இது உடல் வலிக்கும் நிவாரணம் அளிக்கும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நெய்யின் மென்மையும் சேர்ந்து மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்து, கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது.
6. சிறந்த தூக்கத்தை வழங்குகிறது
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் நெய் மற்றும் மஞ்சள் சேர்த்து குடித்தால் நிம்மதியான உறக்கத்தை (Sleep) பெறலாம். இதில் மன அமைதியை தூண்டும் பல கலவைகள் உள்ளன. இந்த கலவையானது உடலை தளர்த்தி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது.
7. செரிமானத்தை மேம்படுத்துகிறது
பாலில் சேர்கப்படும் நெய் செரிமான (Digestion) அமைப்பை சீராக்குகிறது. இந்த கலவை மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. இதனால், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை இது அதிகரிக்கிறது. இந்த பாலை தினமும் குடிப்பதால் செரிமானம் மேம்படுகிறது.
ஆய்வு முடிவுகள்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (என்ஐஎச்) நடத்திய ஆய்வில், மஞ்சளில் உள்ள குர்குமினின் நன்மைகள், வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக தெரியவந்துள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சரும பொலிவை அதிகரிக்கும் சீரக நீர்: தினமும் குடிச்சா ஜொலிக்கும் முகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ