புதுடெல்லி: பண்டிகை காலம் வர உள்ளதால், பெருந்திரளான கூட்டங்களில் மக்களை கலந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) போட்டிருக்கவேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சில தவிர்க்க முடியாத சூழலில் அதில் கலந்து கொள்வது அவசியமானால், அவர்கள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று (வியாழக்கிழமை) கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மெல்ல மெல்லக் குறையத்தொடங்கியுள்ளது. ஆனாலும் அக்டோபர் மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பண்டிகைகளை மக்கள் தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் (Rajesh Bhushan) கூறுகையில், வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் ஒட்டுமொத்தமாக குறைந்து வரும் போக்கைக் காட்டினாலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை என்று எச்சரித்தார்.


ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் 39 மாவட்டங்களில் 10% க்கும் அதிகமாக பாதிப்பு விகிதம் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் 38 மாவட்டங்களில் இது 5 முதல் 10% வரை இருந்தது.


ALSO READ | அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா மூன்றாம் அலை, இலக்கில் குழந்தைகள்: நிபுணர் குழு எச்சரிக்கை


இந்தியாவின்  18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16% பேர் கோவிட் -19 தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்திக்கொண்டனர். அதே நேரத்தில் 54% முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் செலுத்திக்கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.


சிக்கிம், தாத்ரா மற்றும் நகர் அவேலி, இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் 18 வயதை கடந்த அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று பூஷன் கூறினார்.


வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலைக்கு மத்தியில், ஐசிஎம்ஆர் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், பண்டிகை கூட்டத்தில் கலந்து கொள்வது அவசியம் என்றால் முழு தடுப்பூசி போடுவது அவசியம் என்றார்.


ALSO READ | கொரோனா சான்றிதழை வாட்ஸ்அப்பில் பெறுவது எப்படி


மக்கள் வீட்டில் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும், கோவிட் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் தடுப்பூசியை செளுத்திக்கொள்ள வேண்டும்" என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் கூறினார்.


இந்தியாவில் இதுவரை டெல்டாபிளஸ் கொரோனா வைரசால் சுமார்  300 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR