மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிற்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.33 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் இறந்து விட்டனர்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணி துரிதபடுத்தப்பட்டு, இதுவரை சுமார் 12 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இருப்பினும் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பின், ஒரு வார காலம் அல்லது 10 நாள் கழித்து தான் உடலில் எதிர்ப்பு சக்தி தோன்றும். அதற்கு பிறகும் கொரோனா தொற்று (Corona Virus) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும், அது தீவிரமான நோயாக மாறாமல், ஓரிரு நாட்களில் சரியாகி விடும். எனவே, வதந்திகளை நம்பாமல், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சாதாரண மக்கள் மட்டுமல்லாது, அரசியல் தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!
அந்த வகையில், இன்று, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் தகவலை பதிவிட்ட, அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, தன்னுடன் தொடர்பில் வந்த அனைவரையும் பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.33 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் இறந்து விட்டனர்
இந்தியாவில் ஒரே நாளில் 2,34,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16,79,740 ஆக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியை எட்டியுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR