கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!

கொரோனா காலத்தில் மிகவும் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை வேம்பு மற்றும் கற்றாழையிலிருந்து பெறலாம். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2021, 08:43 PM IST
  • கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி விட்டது.
  • கொரோனாவின் காலத்தில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
  • கொரோனா காலத்தில் மிகவும் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை வேம்பு மற்றும் கற்றாழையிலிருந்து பெறலாம்.
கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!

சற்றே ஓய்ந்திருந்த கொரோனா என்னும் அரக்கன், மீண்டும் ஆட்டம் போடத் தொடங்கி விட்டான்.  இந்த நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

கொரோனா காலத்தில், நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி  நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை பெற நீங்கள் கற்றாழை மற்றும் வேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸைக் குடிக்கலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எடையைக் குறைக்கவும் உதவும். இதன் மூலம்,  உங்கள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். 

ஆலூவேரா (Aloe vera) என்படும் கற்றாழை சருமத்தை பாதுகாத்து, ஒரு இரவு நேர எக்ஸ்போலியேட்டராக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதில் ஏராளமாகக் காணப்படுகின்றன, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ALSO READ | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் உடல் நலனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!

கற்றாழை அதாவதுஆலூ வேரா (Aloe Vera), ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும், இதில் ஏராளமான அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கற்றாழையில் வைட்டமின்கள் மட்டுமல்ல, பீட்டா கரோட்டினும் உள்ளது என தோல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தோல், முடி சம்பந்தமான நோய் மட்டுமல்லாது பல நோய்களிலிருந்து விடுபடுவதற்கான பழமையான ஆயுர்வேத வைத்தியங்களில் ஒன்றாக வேம்பு, அதாவது வேப்பிலை (Neem) கருதப்படுகிறது. இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

இவ்வளவு பயன்கள் நிறைந்த  கற்றாழை மற்றும் வேப்பிலையிலிருந்து ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு 1 டீஸ்பூன் வேப்ப இலைகள், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 கப் தண்ணீர் மற்றும் தேன் தேவை. வேப்பிலையையும் கற்றாழையையும் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதன் பின்  தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன்  காலி வயிற்றில் உட்கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும். 

ALSO READ |    ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. கோடையில் முட்டை சாப்பிடலாமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News