Uric Acid: மூட்டு வலியால் அவதியா? யூரிக் அமிலம் அதிகரிக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்
Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். அப்படிப்பட்ட உனவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நமது உடலில் யூரிக் அமிலம் கட்டுப்பாடில்லாமல் போகும் போது, மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க, உடலில் பியூரின் அளவை அதிகரிக்காத உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். அப்படிப்பட்ட உனவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பியூரின்களை அதிகரிக்கும் உணவுகளை கட்டுப்படுத்தவும்
பியூரின் என்பது இயற்கையாகவே அனைத்து உணவுகளிலும் காணப்படும் ஒரு இரசாயனமாகும். ஆனால் சில உணவுகளில் இதன் அளவு மிக அதிகமாக உள்ளது. டுனா, மத்தி போன்ற மீன்களில் பியூரின்கள் அதிகமாக உள்ளன. இது தவிர, மதுபானம், பீர் போன்றவையும் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க காரணமாகின்றன. பால் பொருட்கள், சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்புள்ள உணவுகளும் பியூரின் அளவை அதிகரிக்கின்றன.
கீல்வாதத்தில் செர்ரி நன்மை பயக்கும்
கீல்வாதத்தின் வலியை செர்ரி குறைக்கிறது. செர்ரி பழங்களை உட்கொள்வது மூட்டுவலியின் வலியைக் குறைக்கும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. செர்ரிகளில் யூரிக் அமில அளவைக் குறைக்கும் அந்தோசயினின்கள் எனப்படும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு கலவை உள்ளது.
வைட்டமின் சி உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகின்றது
வைட்டமின் சி யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுகளில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கீல்வாதத்தைத் தடுக்கிறது.
மேலும் படிக்க | இரத்த சோகைக்கு எதிரி! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை சாறு
வாழைப்பழத்தில் உள்ள கீட்டோன்கள் யூரிக் அமிலத்தை குறைக்கிறது
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலில் கீட்டோன் அளவை அதிகரிக்கும். கீட்டோன்கள் யூரிக் அமிலத்தின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன. வாழைப்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
ஆப்பிள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகிறது
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், இதில் உள்ள அமிலம் யூரிக் அமிலத்தின் விளைவைக் குறைக்கிறது. ஆப்பிளில் மாலிக் அமிலம் அதிகமாக உள்ளது. எலிமெண்டல் அமிலம் இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. அதிக யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினமும் ஆப்பிளை உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மாரடைப்பின்போது CPR சிகிச்சை பெற்றவரா? மரண அனுபவங்களை நினைவுகூரலாம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ