Good News கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் முதல் வெற்றி: டொனால்ட் டிரம்ப்
`தடுப்பூசி குறித்து மிகவும் நல்ல செய்தி.` எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், டிரம்ப் தனது ட்வீட்டில் கூடுதல் தகவல்களை குறித்து எதுவும் வழங்கவில்லை,
வாஷிங்டன்: உலகெங்கிலும் உள்ள 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை (Coronavirus Vaccine) நோக்கி முதல் முன்னேற்றத்தைப் பெறுகின்றனர். அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் (Moderna Inc)நிறுவனத்தின் தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ -1273 (mRNA-1273) அதன் முதல் சோதனையில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் பின்னர், அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
அதிபர் டிரம்ப் (Donald Trump) தனது ட்வீட்டில், "தடுப்பூசி குறித்து மிகவும் நல்ல செய்தி." எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், டிரம்ப் தனது ட்வீட்டில் கூடுதல் தகவல்களை குறித்து எதுவும் வழங்கவில்லை, ஆனால் ட்ரம்பின் இந்த பதிவை அடுத்து மாடர்னா இன்க் நிறுவனம் கொரோனா பரிசோதனையில் வெற்றியை நோக்கி செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது.
மாடர்னா இன்க் நிறுவனத்தின் முதல் சோதனையில் 45 பேர் அடங்கிய 18 முதல் 55 வயதுக்குட்பட்ட வர்களை சோதனை செய்தது. அதன் முடிவுகள் வெற்றிகரமாக இருந்தன.
ALSO READ | Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்
ALSO READ | கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
மாடர்னா நிறுவனம் இப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கடைசி நிலை சோதனைக்கு தயாராகி வருகிறது. ஜூலை 27 ஆம் தேதி வரை சோதனையைத் தொடங்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி குறித்த பரிசோதனையை அமெரிக்காவின் 87 ஆய்வு இடங்களில் நடத்துவதாக மாடர்னா கூறியுள்ளது. மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, நிறுவனம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்பப்படுகிறது.
பக்க விளைவுகள் எதுவும் இல்லை
மாடர்னாவின் தடுப்பூசியைப் பற்றிய மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், இதன்மூலம் எந்தவித பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இதன் காரணமாக தடுப்பூசியின் சோதனை எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையின்போது மூன்று அளவு தடுப்பூசி கொடுத்த பிறகு, பாதி பேருக்கு லேசான சோர்வு, உடல் வலி மற்றும் தலைவலி இருந்தது. அதேபோல தடுப்பூசி கொடுத்த பிறகு சுமார் 40 சதவீதம் பேருக்கு லேசான காய்ச்சலை அனுபவித்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஆரம்ப பரிசோதனையில் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ததால், அது ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸை ஒழிப்பதில் இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று அர்த்தமல்ல.