சீதாப்பழம் என்றாலே ஊட்டச்சத்துக்களின் பொதி என்று சொல்லலாம். சீதாபழம் மட்டுமல்ல, அதன் இலைகளும் மருத்துவ சக்தி நிறைந்தது. சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் B, மக்னீசியம், வைட்டமின் C, நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகிய அனைத்துமே அதன் இலைகளிலும் உள்ளன. மூட்டு வலி, முழங்கால் வலி, ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் சீதாப்பழ இலையில் உள்ள கால்சியம் அருமருந்தாக செயல்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதாப்பழ இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்


பற்களை வலுப்படுத்தும் சீதாப்பழ இலைகள்


சீதாப்பழ இலைகள் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது இதிலுள்ள ஃபீனால் அடிப்படையிலான கலவைகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளிட்ட பல்வேறு பைட்டோ கெமிக்கல்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.


நீரிழிவை கட்டுப்படுத்தும் சீதாப்பழ இலை


சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் பல்வேறு நோய்களை உருவாக்கும் மோசமான நோயாக உருவெடுத்துள்ளது. ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நீரிழிவு முதன்மை எதிரியாக உள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருந்தால், பற்களின் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். காயங்களை குணப்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சீதாப்பழத்தின் இலைகள் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கும்.  தினசரி காலையில் சீத்தா மரத்தின் இலைகளில், கசாயம் தயாரித்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.


வைட்டமின் ஏ & சி நிறைந்துள்ள சீதாப்பழ இலைகள்
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ள சீதாப்பழ இலைகள், ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். வைட்டமின் ஏ பற்களின் வலிமைக்கு சிறந்தது என்றால், வைட்டமின் சி ஈறு ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைச் செய்வதாக இருக்கும். இது பற்களில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.


மேலும் படிக்க | சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க இதை விட பெஸ்ட் சாய்ஸ் எதுவுமே இல்ல! ஆயுர்வேத டிப்ஸ்!


மலச்சிக்கல் & அல்சர்


சீதாப்பழ இலைகளில் உள்ள  நார்ச்சத்து செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. சீதாப்பழ இலைகள் மலச்சிக்கலைத் தடுக்கவும், புண்களைக் குணப்படுத்தவும் உதவும்.


சீத்தா இலைகளை எப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்?


சீத்தா மர இலைகளை கழுவி, தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதன் பிறகு வடிகட்டினால் போதும். அதனுடன் வேறு எதையும் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை. தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் வைக்கக்கூடியவை.


நார்சத்துக்களை செரிமானம் அடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வேலையைச் செய்யும் சீத்தாப்பழ இலைகள், உடலில் காயங்கள், புண்கள், அலர்ஜி தழும்புகள், கொப்புளங்கள் என அனைத்தையும் விரையில் காய வைக்கும். சீத்தா இலைகளை அரைத்து புண்கள் மேல் பற்றுபோல போடுவதால், புண்கள் விரைவில் ஆறத்துவங்கும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரெட் அலெர்ட்... நெய் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் இதை தெரிஞ்சுக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ