சிறுநீரக கற்களை உருவாக்கும் காய்கள்: இவற்றை சாப்பிடும்போது அலர்டா இருங்க
Kidney Stones: சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் ஆன கடினமான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிறிய கற்களாக உருவாகும்.
Kidney Stones: இந்த நவீன யுகத்தில் பல வித நோய்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், உயர் யூரிக் அமிலம், சிறுநீரக கற்கள் ஆகியவையும் அடங்கும். ஆரோக்கியமற்ற உணவுமுறையும், வாழ்க்கை முறையும் இவற்றுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். இவற்றின் அறிகுறிகளை பற்றி தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் மிக அவசியமாகும்.
சிறுநீரக கற்கள் (Kidney Stones)
சமீப கலாங்களில் சிறுநீரக கற்கள் பிரச்சனை மிகவும் பொதுவானதாகி விட்டது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் ஆன கடினமான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிறிய கற்களாக உருவாகும். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிறுநீரக கற்கள்: முக்கிய அறிகுறிகள் (Symptoms of Kidney Stones)
சிறுநீரகக் கற்கள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கான பொதுவான சில அறிகுறிகளை இங்கே காணலாம்.
- சிறுநீரகக் கற்கள் இருந்தால், முதுகில், அடிவயிற்றில் அல்லது பக்கவாட்டில் வலி ஏற்படும்.
- சிறுநீர் கழிக்கும் போது வலி இருக்கும்.
- சிறுநீரில் இரத்தம் வர வாய்ப்புள்ளது.
- சிறுநீர் கழிக்கமுடியாத சூழல் உருவாகலாம்.
- சிலர் அதிக அளவு சிறுநீர் கழிப்பார்கள்.
- சிறுநீரில் துர்நாற்றம், நுரை போன்ற அறிகுறிகள்
- வாந்தி சங்கடம்
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் (Reasons for Kidney Stones)
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும், உணவுப் பழக்கம் இதில் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. பொதுவாக காய்கள் மற்றும் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லவையாக கருதப்படுகின்றன. ஆனால், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதி நாம் அனைவரும் தினமும் உட்கொள்ளும் சில காய்கறிகளும் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகலாம். இந்த தகவல் சிலருக்கு அதிர்சியை அளித்தாலும், இது உண்மை!!
சிறுநீரக கற்களை உண்டாக்கும் காய்கறிகள்:
கீரை
பாலக் கீரையில் (Spinach) அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளன. இது சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். அதிகப்படியான கீரையை உட்கொள்வது உடலில் ஆக்சலேட்டுகளின் அளவை அதிகரிக்கும். இது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கிறது.
கடலை, பருப்பு வகைகள்
ராஜ்மா, கொண்டைக்கடலை, பயத்தம்பருப்பு போன்ற கடலை வகைகள் மற்றும் பருப்பு (Pulses) வகைகளிலும் அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளன. நீண்ட காலத்திற்கு இவற்றை அதிக அளவில் உட்கொள்வது உடலில் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கத்திரிக்காய்
கத்தரிக்காயிலும் (Brinjal) ஆக்சலேட்டுகள் அதிகமாக உள்ளன. எனினும், கீரையை விட இதில் அளவு குறைவாகவே உள்ளது. ஆனால், அடிக்கடி கத்திரிக்காயை அதிக அளவில் உட்கொள்வது, சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
தக்காளி
தக்காளியிலும் (Tomato) சிறிய அளவில் ஆக்சலேட்டுகள் காணப்படுகின்றன. இந்த அளவு அதிகம் இல்லை என்றாலும், தக்காளியை அதிகமாக உண்ணும்போது அது ஆபத்தாகலாம். தக்காளியை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் (Cucumber) சிறிய அளவில் ஆக்சலேட்டுகளும் உள்ளன. வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. குறிப்பாக ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ள மற்ற காய்கறிகளுடன் வெள்ளரிக்காயையும் உட்கொள்ளும் போது சிறுநீரக கற்களுக்கான ஆபத்து இன்னும் அதிகரிக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தாம்பத்திய வாழ்க்கையில்... சுவையை கூட்டும் சில சூப்பர் மசாலாக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ