பூண்டால் உருவாகும் பிரச்சனைகள்! அதிகமாக உண்டால் இந்த ‘5’ உடல்நல கோளாறுகள் நிச்சயம்!
Garlic Side Effects: பூண்டு உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் அருமருந்து. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற செலவாடை பூண்டுக்கு 100% பொருத்தமானது.
புதுடெல்லி: பூண்டு உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் அருமருந்து. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற செலவாடை பூண்டுக்கு 100% பொருத்தமானது. அளவோடு பூண்டை உட்கொள்ளாவிட்டால் என்னென்ன பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படும் என்று தெரிந்தால், பூண்டுக்கு கட்டுப்பாப்டு போட்டு விடுவீர்கள்.
பூண்டை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் உடல நல பாதிப்புகள்:
தேவையான அளவை விட அதிகமாக பூண்டு உட்கொள்ளும் போது, அதிலும் பச்சையாக, அதாவது சமைக்காத பூண்டை அதிக அளவில் உட்கொண்டால் உடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், இது ஹலிடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
செரிமான பிரச்சினைகள்
பூண்டு உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல்.என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்!
நெஞ்செரிச்சல்
பூண்டை அதிகமாக உட்கொள்வது அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பை திறம்பட அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வயிற்றுப்போக்கு
அதிகப்படியான பூண்டு உட்கொள்ளவதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் மற்றும் நீங்கள் உண்ணும் உணவுகளை ஜீரணிக்கும் திறனை பாதிக்கலாம், இதனால் இது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
வாயு மற்றும் அமிலத்தன்மை
அதிகப்படியான பூண்டு சாப்பிடுவது ஒரு குறிப்பிட்ட வாயு உருவாவதற்கு வழிவகுக்கும், இது உணவுக்குழாயின் உள் புறத்தில் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, ஏற்கனவே அமில வீச்சு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பூண்டை ஒருபோதும் அதிக அளவில் சாப்பிடக்கூடாது.
மேலும் படிக்க | உடல் எடையை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! இதை தவிர்த்தால் ஒல்லியாகலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ