பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பச்சையாக உள்ள பப்பாளியை காயாக சமைத்தும் சாப்பிடலாம், பழுத்த பிறகுக் பப்பாளியை பழமாகவும் சாப்பிடலாம். அதாவது வாழையைப் போல பப்பாளியும், காயாகவும், கனியாகவும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்யக்கூடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், பாப்பாளி காயை சமைத்து உண்பது அதிக சத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை.


மறுபுறம், பச்சை பப்பாளி சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பெண்களுக்கு பச்சை பப்பாளியின் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துக் கொண்டால், பழமாக சாப்பிடுவதை விட, காயாக இருக்கும் பப்பாளியை சமைத்து சாப்பிடத் தொடங்கிவிடுவீர்கள்.


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிங்க... ஏற்படும் அற்பத மாற்றங்களை பாருங்க!


பெண்களுக்கு பச்சை பப்பாளியின் நன்மைகள்
சிறுநீர் தொற்று நீங்கும்
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை சிறுநீர் தொற்று. பெரும்பாலான பெண்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். சிறுநீரகத் தொற்று பிரச்சனை ஏற்பட்டவர்கள்பச்சை பப்பாளியை உட்கொள்ள வேண்டும். பச்சை பப்பாளியில் உள்ள கூறுகள் உடலில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் அதனால்தான் பெண்கள் பச்சையாக பப்பாளியை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


மாதவிடாய் வலி நீங்கும்
மாதவிடாய் காலத்தில் பல பெண்களுக்கு கடுமையான வலி இருக்கும். இந்த பிரச்சனையை தவிர்க்க, பச்சை பப்பாளியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சை பப்பாளியை உட்கொள்வது உடலில் ஆக்சிடோசிஸின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். அதனால் பெண்கள் கண்டிப்பாக பப்பாளிக்காயை சமைத்து சாப்பிட வேண்டும்.



இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் பப்பாளிக்காய்
நீரிழிவு பிரச்சனை பெண்களுக்கு மிகவும் பொதுவானது. பச்சை பப்பாளியின் நுகர்வு நீரிழிவு பிரச்சனையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதனால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை பப்பாளியை சாப்பிட வேண்டும்.


பாசிப்பருப்புடன் சேர்த்து பச்சைப் பப்பாளியை கூட்டாக செய்து சாப்பிடலாம். பப்பாளிக்காயை பொரியலாக சமைத்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாழைப்பழம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ