வைட்டமின் பி 12 இன் குறைபாடு: நல்ல உடல் கட்டமைப்பிற்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு முக்கியமான தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் பி12 முக்கியமானதொரு இடத்தில் உள்ளது, ஏனெனில் இது நமது உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவும், மேலும் இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. இது தவிர, வைட்டமின் பி 12 சினெர்ஜி போன்ற உடலின் பல கூறுகளை உருவாக்க உதவுகிறது, இது நம் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. எனவே நீரில் கரையும் வைட்டமின் ஆன பி 12 மற்றும் சயனோகோபாலமைன் அதிகம் உள்ள உணவு வகைகள் என்னென்ன? அவற்றால் நம் உடலுக்கு கிடைக்கும் சத்துகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் பி 12 குறைபாடு: பல சமயங்களில் வைட்டமின் பி12 உணவுப் பொருட்களில் இருந்து போதுமான அளவில் கிடைக்காது, அதனால் உடலில் இதன் குறைபாடு அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் சோர்வு, குழப்பம், தலைவலி, அஜீரணம், பசியின்மை, கை மற்றும் கால்களின் வீக்கம் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவை நரம்பியல் பிரச்சினைகள், ஞாபக மறதி, போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்போது வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படும் கடுமையான நோய்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நித்ய கல்யாணி..! பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்


நரம்பு மண்டல பிரச்சனை
நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமானது. குறைபாடு இருந்தால், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, கை, கால்களில் உணர்வின்மை மற்றும் மரத்துப்போதல், நடக்க சிரமம், ஞாபக மறதி மற்றும் பிற அறிவாற்றல் பிரச்சினைகள் ஏற்படுத்தும்.


இருதய நோய்
பல ஆய்வுகள் பி12 குறைபாட்டை இதய நோய் அபாயத்துடன் இணைத்துள்ளன. பி12 ஹோமோசைஸ்டீனின் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு அமினோ அமிலமாகும், இது அதிக அளவில் இருக்கும்போது இரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும்.


வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்


1. இறைச்சி: இறைச்சியில் (ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, சிக்கன்) வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இவற்றில் வைட்டமின் பி12 அதிக அளவில் காணப்படுகிறது.


2. கடல் உணவு: மீன், மீன் எண்ணெய், கடல் கீரைகள் போன்ற கடல் உணவுகள். 6 அவுன்ஸ் சமைத்த சால்மன் மீனில் வைட்டமின் பி12 தினசரி தேவையில் 200% உள்ளது.


3. பால் மற்றும் பால் பொருட்கள்: பால், பன்னீர், தயிர், நெய் போன்றவற்றிலும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.


4. முட்டை: முட்டை வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாகும். தினமும் காலையில் காலை உணவாக சாப்பிடலாம்.


5. ஈஸ்ட் உணவு: பிரட், பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற ஈஸ்ட் உணவுகளிலும் வைட்டமின் பி12 ஏராளமாகக் காணப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | மாம்பழ தோலை தூக்கி எறியவேண்டாம்..! அதில் இருக்கும் மருத்து குணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ