கோபம் - எரிச்சல் அதிகம் வருகிறதா... ‘இந்த’ வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கலாம்..!!
மழைகாலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதன் காரணமாக இந்த பருவத்தில், உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பல சமயங்களில் காரணமே இல்லாமல் கோபமும் எரிச்சலும் வரலாம். திடீர் என்று மனதிற்கு ஏதோ சரியில்லை என மனதில் தோன்றலாம். சில சமயங்களில் அழ வேண்டும் என தோன்றலாம். மிகவும் பலவீனமாக, ஆற்றல் இல்லாமல் இருப்பது போல் உணராலம். . இந்த அறிகுறிகள் அனைத்தும் உடலில் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், மனச்சோர்வு ஏற்படும். உடலில் கால்ஷியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடல் கால்ஷியம் சத்தை உறிஞ்சாது. எனவே, வைட்டமின் டி குறைபாடு காரணமாக, எலும்புகள் பலவீனம் அடைந்து, மூட்டு வலி, உடல் வலி, பலவீனம் மற்றும் மனநிலை மாற்றம் ஆகியவை ஏற்படலாம். இங்கே கூறப்பட்டுள்ள பிரச்சனைகளை நீங்களும் எதிர்கொண்டால், கண்டிப்பாக உங்கள் உடலில் உள்ள வைட்டமின் டி அளவை ஒரு முறை (Health Tips) பரிசோதிக்கவும்.
மழைகாலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதன் காரணமாக இந்த பருவத்தில், உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. டயட்டில் கவனம் செலுத்தாத நிலை, மருந்தின் பக்கவிளைவு அல்லது சூரிய ஒளி உடலில் அதிகம் படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பல சமயங்களில் வைட்டமின் டி உடலில் குறைகிறது.
வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் தோன்றும் அறிகுறிகள்
1. நாள் முழுவதும் சோர்வாக உணர்தல்
2. எலும்பு வலி மற்றும் மூட்டு வலி
3. மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வு
4. உடல் வலி மற்றும் பிடிப்புகள் இருப்பது.
மேலும் படிக்க | மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்!
உடலில் வைட்டமின் டி அளவு எந்த அளவிற்கு இருக்க வேண்டும்
வைட்டமின் டி ஒரு மில்லி லிட்டருக்கு 50 நானோகிராம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், வைட்டமின் டி மிக அதிக அளவாக இருக்கும்.வைட்டமின் டி அளவிற்கு அதிகமாக இருந்தாலும், உடல் நலப் பிரச்சினை ஏற்படும்.
வைட்டமின் டி ஒரு மில்லிலிட்டருக்கு 20 நானோகிராம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், இது உடலுக்கு தேவையான போதுமான அளவு.
வைட்டமின் டி ஒரு மில்லிலிட்டருக்கு 12 நானோகிராம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளது என பொருள் கொள்ளலாம்.
வைட்டமின் டி ஒரு மில்லிலிட்டருக்கு 20 நானோகிராம் குறைவாக இருந்தால் அது லேசான குறைபாடாகக் கருதப்படும்.
வைட்டமின் டி ஒரு மில்லிலிட்டருக்கு 10 நானோகிராம் குறைவாக உள்ளவர்களுக்கு மிதமான குறைபாடு இருக்கும்.
வைட்டமின் டி ஒரு மில்லிலிட்டருக்கு 5 நானோகிராம் அளவிற்கு குறைவாக இருந்தால் அது தீவிரமான குறைபாடு நிலை.
வைட்டமின் டி குறைபாட்டை தீர்க்கும் வழிமுறை
உடலில் வைட்டமின் டி ஊட்டச்சத்து மிகக் குறைவாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி ஊட்டசத்து மாத்திரைகளை எடுத்த் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, தினமும் காலை சூரிய ஒளி உடலில் படும்படி உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி மேற்கொள்ளவும். இதன் காரணமாக, வைட்டமின் டி உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது. உங்கள் உணவில் பால் பொருட்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளைச் சேர்க்கவும். இதன் மூலம் உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டை ஈடுசெய்ய முடியும்.
மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ