புதுடெல்லி: உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. அது உங்களை வலுவானனவராகவும், ஆரோக்கியமானவராகவும் ஆக்குகிறது. அது உங்கள் உடலில் ஏற்படும் சோர்வை அகற்ற உதவுகிறது. நடைபயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்ததும் தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டைபயிற்சியை தினமும் பழக்கமாக்கிக் கொள்வதால் உடல் இரத்த ஓட்டமானது சீராகிறது, நுரையீரல் சுவாசம் சீராகிறது, உணவு செரிமானம் சீராகிறது மேலும் இது உடலை வலுப்படுத்துவதோடல்லாமல் மூளையை நன்றாக புத்துணர்ச்சியாக்குகிறது. நடைபயிற்ச்சி மிகவும் எளிய முறையான உடல்பயிற்ச்சி ஆகும். 


நடைபயிற்சியின் நன்மைகள் என்னவென்று காண்போம்:-


* இதய ஆரோக்கியம்


நடைபயிற்சி சிறந்த கார்டியோ உடற்பயிற்சி ஆகும். அது எல்டிஎல் (தீய) கொழுப்பு அளவை குறைக்கிறது மற்றும் எச்டிஎல் (நல்ல) கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. தினமும் 30 நிமிடம் நடைபயிற்ச்சி செய்தால் உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவும்.


* நல்ல ஆரோக்கியம்


தினமும் நடைபயிற்சி செய்து வந்தால்  நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற வற்றை தடுக்க முடியும்.


* எடை மேலாண்மை


நடைபயிற்ச்சி செய்வதால் உடலில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்கலாம். தினமும் 30 நிமிடம் நடைபயிற்ச்சி செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது.


* மன அழுத்தம் குறையும்


நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. தினமும் நடைபயிற்ச்சி செய்து வந்தால் மன அழுத்தம் அளவு குறைய வாய்ப்புள்ளது.


* சிறந்த செயல்திறன் 


நடை பயிற்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 


தினமும் 10,000 அடிகள் (ஐந்து மைல்கள்) நடந்தால் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளார்கள். எனவே நடைபயிற்சியை மேற்கொள்வோம் ஆரோக்கியம் காப்போம்.