உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கு (Lifestyle) அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுக்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள உணவுத் திட்டத்தை பின்பற்றினால், உடலில் உள்ள நச்சுக்கள் இயல்பாக வெளியேறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், கொரோனா பரவலால் அவதிப்படும் நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் இந்த காலகட்டத்தில் ஆயுர்வேதத்தின் மகத்துவத்தை உணர்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.  


உடலின் செரிமான சக்தி பலவீனமாக இருப்பது மற்றும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதே நோய்கள் உருவாதற்கான காரணம் என ஆயுர்வேதம் நம்புகிறது. செரிமான (Digestion) கோளாறும், உடல் பலவீனமும் உடலில் அதிகப்படியான நச்சுக்களை உருவாக்குகிறது. இந்த நச்சுக்கள் உடல் செயல்பாடுகளைத் தடுக்கின்றன. அதோடு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டால் நோய்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் நோய்கள் நீண்ட காலம் நீடிக்கும். 


Also Read | Sweetness: இனிப்பு சுவையின் அடிப்படை அம்சங்கள் என்ன தெரியுமா?


இந்த நச்சுக்களை உணவு மூலமாகவே சுலபமாக அகற்றலாம். மருத்துவர்கள் (Doctors) குழுவால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத உணவு திட்டமானது, உடலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மாற்றுகிறது.


இந்த முழுமையான அணுகுமுறையை கடைபிடித்தால், இயற்கையான முறையில்   ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டு வரும். ஆயுஷக்தி அமைப்பின் இணை நிறுவனர் டாக்டர் ஸ்மிதா நாராம், உடலை உள்ளே இருந்து சுத்தப்படுத்த உதவும் சில சரியான உணவு திட்டங்களை பகிர்ந்து கொள்கிறார். சரியான திட்டத்தை முயற்சி செய்வதற்கான சரியான செய்முறையை அறிந்து பயனடையலாம்.


உடலை சுத்தப்படுத்த உதவும் டிடாக்ஸ் டயட் திட்டம் (Detox Diet Plan)


தினசரி காலையில் 3 லிட்டர் தண்ணீரில் 1-2 தேக்கரண்டி சுக்குப் பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இந்த சுக்கு நீரை  ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 1 கப் குடிக்கவும். தொடக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு சுக்கு நீரை குடிக்கவும்,


அடுத்த 1 முதல் 2 நாட்களுக்கு பாசிப்பயறுடன் காய்கறிகளை (Vegetbles) சேர்த்து சூப்பாக செய்து குடிவ்க்க வேண்டும்.  2 3 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு கிண்ணம் சூப் குடிக்கவும். இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


Also Read | ICMR: டெல்டா வைரஸில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு உண்டு?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR