சிறந்த சருமத்தை பெற வேண்டுமா? தவறாமல் கடைபிடிக்க வேண்டிய எளிய 5 குறிப்புகள்!
வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சருமம் இயற்கையான பளபளப்பை பெறுகிறது.
சிலருக்கு இயற்கையாகவே அழகான, பளபளப்பான சருமம் இருக்கும், ஆனால் சிலருக்கு அப்படி இருக்காது சருமத்தில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கும். பெரும்பாலும் ஒருவரது அன்றாட பழக்கவழக்கங்கள் சருமத்தில் சிலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சருமத்தில் எவ்வித மாசு மருவும் அண்டாமல் இயற்கையான பளபளப்பை தினமும் 5 பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பின்வருமாறு காண்போம்.
மேலுன் படிக்க | கோடையில் திராட்சை அளிக்கும் அற்புத நன்மைகள்: பல வித நோய்களுக்கு ஒரே நிவாரணம்
இரவுநேர சரும பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படும் "கேன்வாஸ்" உறங்குவதற்கு முன் முகத்தை சரியாக சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட வேண்டும், இது மிகவும் முக்கியமானது. இறந்த சரும செல்கள், எண்ணெய், பாக்டீரியா, வியர்வை மற்றும் பிற அழுக்குகள் நாள் முழுவதும் தோலின் மேற்பரப்பில் குவிந்து கிடக்கின்றன. டபுள் க்ளென்சிங் முறை மூலம் போர்சை நீக்கலாம், இவை க்ளென்சிங் செய்த பிறகும் உங்கள் சருமத்தில் இருக்கும் வாய்ப்புண்டு. இரவு நேரத்தில் முகத்தை கழுவுவது ஆரோக்கியமானதாகும், இரவு உறங்க செல்வதற்கு முன்னர் எப்போது மேக்கப்பை அகற்றிவிட்டு முகத்தை கழுவிவிட வேண்டும், இல்லையெனில் சருமம் நிச்சயம் பாத்திற்குள்ளாகும்.
உங்கள் உடலின் நிலை தான் தோலில் பிரதிபலிக்கிறது, உடல் ஆரோக்கியகமாக இருந்தால் தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமானதாகும். வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்களில் அதிகமாக உள்ளது, இது பல்வேறு பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது சருமத்தில் இருக்கும் பாதிப்புகளை குணப்படுத்தி சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி உங்கள் உடலின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மசாஜ் செய்வது உடலுக்கு இதமான உணர்வை தருகிறது, அதிலும் முகத்திற்கு செய்யும் மசாஜ் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது மன அழுத்தத்தை நீக்குவது மட்டுமல்லாமல், சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, சருமத்தை இறுக்குகிறது மற்றும் முகத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது. அதிக செலவு செய்து முகத்திற்கு கண்ட மருத்துவத்தை செய்வதையைவிட முறையாக 5 நிமிடம் மசாஜ் செய்வது சிறந்த பலனை அளிக்கிறது. இதன்மூலம் முகத்திலுள்ள நச்சுக்கள் நீங்கி, ரத்த ஓட்டம் சீராகி முகத்திற்கு நல்ல பிரகாசத்தை அளிக்கிறது.
மேலும் அதிகப்படியான சூரிய ஒளி உங்கள் சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக சூரிய ஒளி முகத்தில் பட்டால் கரும்புள்ளிகள் மற்றும் சரும நிறமாற்றம் ஏற்படுகிறது, அதுமட்டுமல்லாது இது தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை உருவாக்குகிறது. குறைந்தபட்சம் 15 SPF மற்றும் ஸ்பெக்ட்ரம் பாதுகாப்பு கொண்ட சன்ஸ்கிரீனை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள், இது கதிர்வீச்சுகளிலிருந்து சருமம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துகிறது.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கூட நீரிழப்பு சருமத்தை கொண்டிருக்கலாம், நமது உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பது நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, முகப்பருக்கள் வருவதை தடுக்கிறது. நீர் வாழ்க்கையில் கிடைத்த அமிர்தமாக கருதப்படுகிறது, இவை உடலை வலுப்படுத்தவும் சரும அழகை மேபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR