நமது அன்றாட உணவு வகைகளில் வெள்ளை சர்க்கரை தவறாமல் இடம்பெறுகிறது, இதன் இனிப்பு சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.  தினசரி நாம் எவ்வளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற வரம்பு உள்ளது, அதனை மீறி நாம் சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகிறது.  கேக், குக்கீஸ், சாக்லேட்டுகள், ப்ரவுனீஸ், டோனட்ஸ் போன்ற பல சுவையான பொருட்களின் தயாரிப்பில் சர்க்கரை முதன்மையானதாக சேர்க்கப்படுகிறது.  அதிகளவு சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய் அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.  நாம் அதிகளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதை சில அறிகுறிகளின் மூலம் நமது உடல் வெளிப்படுத்துகிறது, இந்த அறிகுறிகளை நாம் உற்றுநோக்கி சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த மசாலா 'மேஜிக்' டீ கைவசம் இருந்தால் போதும், சுகர் ஏறவே ஏறாது 


1) அதிகளவு சர்க்கரை சாப்பிடுவதால் சரும ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது, குறிப்பாக நீங்கள் அதிகளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உங்களது முகப்பரு காட்டிவிடுகிறது.  சர்க்கரை உடலில் ஆண்ட்ரோஜன் உற்பத்தியை தூண்டிவிட்டு முகப்பருவை உண்டாக்குகிறது மற்றும் இது முகத்தில் அதிகப்படியான எண்ணெயையும், வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.


2) நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள் அல்லது உங்களால் அன்றைய தினம் எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்யமுடியவில்லை என்றால் நீங்கள் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.  அதுவே சர்க்கரையை சாப்பிட்ட பின் உடலுக்கு ஆற்றல் கிடைத்துவிட்டதாக உணர்ந்தால், உங்கள் உடலை அதிகப்படியான சர்க்கரைக்கு அடிமையாகி உள்ளது என்று அர்த்தம்.


3) உப்பு மட்டுமல்ல, அதிகப்படியான சர்க்கரையும் உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, எனவே சர்க்கரையை அதிகப்படியாக உணவில் சேர்த்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்.  உயர் அழுத்தத்தால் கார்டியோ வாஸ்குலார் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.


4) அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலால் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை பொதுவான ஒன்றாக இருக்கிறது, இது உங்கள் மரபணுக்களில் சிக்கலை உண்டுபண்ணுகிறது.  மக்கள் பலரும் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக சர்க்கரையை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


5) சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கின்றது.  எனவே இந்த பொருளை நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு எப்போதும் பசியுணர்வு இருக்கும்.  உடலில் நார்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும்போது அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள நேரிடும்.


அதிகளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ளாமல் இருக்க நீங்கள் சில பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.  அதிகப்படியான உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டுவிடாமல், சிறிது இடைவெளி விட்டு குறைவான அளவு உணவை உண்ணுங்கள் மற்றும் உங்கள் டயட்டில் அதிகளவு நார்சத்து நிறைந்த உணவுப்பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.  வெள்ளை சர்க்கரையாக சாப்பிடுவதை தவிர்ப்பது மட்டும் முக்கியமல்ல, சர்க்கரை கலந்த மற்ற உணவுகளையும் தவிர்ப்பதில் கவனமாக இருங்கள்.  தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் ஒதுக்கிவிடுங்கள்.


மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் டீ குடிப்பதால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ