உடல் எடையை குறைக்க சுரைக்காய் ஜூஸ்: சுரைக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு பச்சை காய்கறியாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பொட்டாசியம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இது தவிர, போதுமான அளவு தண்ணீரும் சுரைக்காயில் உள்ளது. ஆகையால், இதை உட்கொண்டால் உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.
பொதுவாக சுரைக்காய் கறி, பகோடா, கூட்டு அல்லது அல்வா ஆகிய உணவு வகைகள் மிகவும் விரும்பப்படும். ஆனால் நீங்கள் எப்போதாவது சுரைக்காய் சாறு குடித்து நாளை துவக்கியுள்ளீர்களா? இல்லையென்றால், அதை கண்டிப்பாக செய்து பாருங்கள். சுரைக்காய் சாறு தயாரிப்பதற்கான செய்முறையை இந்த பதிவில் காணலாம்.
சுரைக்காய் சாறு குடிப்பது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. மிக விரைவாக இதை தயாரித்து குடிக்கலாம். சுரைக்காய் சாறு செய்வதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்.
சுரைக்காய் சாறு செய்ய தேவையான பொருட்கள்:
1 சுரைக்காய்
1/2 டீஸ்பூன் சீரக தூள்
1/2 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு
1 அங்குல துண்டு இஞ்சி
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
2 டீஸ்பூன் புதினா இலைகள்
1 கிளாஸ் குளிர்ந்த நீர்
ருசிக்கு ஏற்றவாறு உப்பு
4-5 ஐஸ் கட்டிகள்
மேலும் படிக்க | மியூஸ்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு தயாராகிக் கொள்ளுங்கள்..!
சுரைக்காய் சாறு செய்வது எப்படி?
- சுரைக்காய் சாறு தயாரிக்க, முதலில் சுரைக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் அதை நன்றாக தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- அதன் பிறகு, புதினா இலைகளை கழுவி பொடியாக நறுக்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய சுரைக்காய், சீரகத்தூள், மிளகுத்தூள், இஞ்சித் துண்டுகளை மிக்ஸியில் போடவும்.
- அதன் பிறகு, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிளெண்ட் செய்துகொள்ளவும்.
- பின்னர் பிளெண்டரின் மூடியைத் திறந்து அதில் நீரை சேர்க்கவும்.
- அதற்கு பிறகு மீண்டும் நன்றாக அரைத்து, பேஸ்ட்டை மீண்டும் ஒரு முறை சுமார் 1-2 நிமிடங்கள் கலக்கவும்.
- பின்னர் இந்த சாற்றை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் இரண்டு மூன்று ஐஸ் கட்டிகள் போடவும். (ஐஸ் கட்டிகள் போடாமலும் குடிக்கலாம்).
- உங்களது சத்தான சுரைக்காய் சாறு தயாராகி விட்டது.
சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- சுரைக்காயில் உள்ள பண்புகள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
- வெயில் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால், உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படும். அதாவது, வெப்பத்தை எதிர்த்து போராட இது உதவுகிறது.
- சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து போன்றது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
- சுரைக்காய் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்காது.
- சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நீங்கள் உண்ணும் அனைத்து உணவின் முழுப் பலனையும் உடல் பெறுகிறது.
- சுரைக்காயில் அதிக அளவில் இரும்புச்சத்து காணப்படுவதால், உடலில் ஹீமோகுளோபினின் சரியான அளவை பராமரிக்க இது உதவுகிறது.
- சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
- கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் இயற்கையாகவே கிடைக்கின்றன. எனவே இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
- வாந்தி, பேதி சங்கடம் ஏற்பட்டால் சுரைக்காய் தயிர் பச்சடி சாப்பிட்டால், இந்த பிரச்சனைகள் கட்டுப்படும். பலவீன உணர்வு இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிறுநீரகத்தை தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்..! இதோ எளிமையான 5 வழிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ