அசிடிட்டி அல்லது வாந்தி போன்ற உணர்வை அடிக்கடி உணர்ந்தீர்கள் என்றால் அது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.  எனவே வயிறு தொடர்பாக நீங்கள் சில அசாதாரண உணர்வுகளை உணரும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.  வயிற்றுப் புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் ஒருவரின் வயிற்றைப் பாதிக்கிறது, வயிற்று புற்றுநோய் எந்த வயதினரையும் எந்த  நேரத்திலும் பாதிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  ஆரம்பத்திலேயே வயிற்று புற்றுநோயினை கண்டறிந்து விட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய எந்த பிரச்சனைகளையும் சந்திக்காமல் இருக்கலாம்.  வயிற்று புற்றுநோய் இருப்பதை உணர்த்தக்கூடிய சில அறிகுறிகளை பற்றி பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!


1) வயிற்று புற்றுநோய் இருந்தால், நீங்கள் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை பெறுவீர்கள்.  இந்த புற்றுநோய் அடிவயிறு வரை பரவி, உங்கள் வயிற்றில் திரவ சேகரிப்பை ஏற்படுத்தும்.  இதனால் உங்கள் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு, வயிற்றில் ஒரு குழந்தையைச் சுமப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.


2) அமிலத்தன்மையால் நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது அன்றாட நடவடிக்கைகளை எளிதாகச் செய்ய முடியவில்லை என்றாலோ அது வயிற்றுப் புற்றுநோயின் காரணமாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.


3) வயிற்றுப் புற்றுநோய் இருந்தால் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.  உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பழச்சாறுகள் உங்கள் செரிமானப் பகுதியின் ஆரம்பப் பகுதியான டியோடெனத்தை நோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.  இதன் காரணமாக சாப்பிட்டவுடன் உங்களுக்கு வாந்தி ஏற்படும்.


4) வயிற்றுப் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் பொதுவான அறிகுறியாக எடை இழப்பு இருக்கிறது.  வாந்தி, வயிற்று வலி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருப்பதால், நீங்கள் உணவு உண்பதைத் தவிர்ப்பீர்கள், இதனால் உங்களது உடல் எடை குறையும். 


5) வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் தீவிரமாக பலவீனம் அடையும், உங்களால் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் போகலாம்.  எனவே அறிகுறிகளைக் கவனித்து, சரியான நேரத்தில் மருத்துவ உதவியை பெறுவது நல்லது.


6) உணவு உண்டவுடன் மார்பு எலும்பின் கீழ் வயிறு நிரம்பியிருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதும் வயிற்றுப் புற்றுநோயின் மற்றொரு அறிகுறியாகும். 


7) வயிற்றுப் புற்று நோயால் பாதிக்கப்படும் போது ​​அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 


8) புற்றுநோயினால் உங்களுக்கு வயிறு வீக்கமடைந்து, உங்களால் செயல்பட முடியாமல் போகலாம்.  


9) கறுப்பு நிற மலம் மற்றும் கறுப்பு நிற வாந்தியெடுத்தல் ஆகியவை வயிற்றுப் புற்றுநோயின் மற்றொரு பொதுவான அறிகுறிகளாக காணப்படுகிறது.


10) மேலும் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது வயிற்று புற்றுநோய் இருந்தால், நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.


மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ