கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? ஜாக்கிரதை!! கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம்
High Cholesterol Sign: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கெட்ட கொலஸ்ட்ராலுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும்.
கெட்ட கொலஸ்ட்ராலுக்கான ஆரம்ப அறிகுறிகள்: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. உணவு மற்றும் அவசர வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து வருகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. எனினும், கெட்ட கொலஸ்ட்ராலுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும். இந்த ஆரம்ப அறிகுறிகளை நாம் எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. உடல் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ இருந்தால், தசைகள் இழுக்கத் தொடங்கினால், ஆபத்து மணி அடிக்கிறது என்பதை புரிந்துகொள்வது நல்லது.
கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற ஒட்டும் பொருளாகும். உடலில் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகை கொலச்ட்ரால் உள்ளது. நம் உடலுக்கு அதிக அளவில் நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. அதே சமயம் கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தால், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் இரத்தத்தில் காணப்படுகிறது. கொழுப்பின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, அது இரத்த நாளங்களில் குவிந்து, இரத்த ஓட்டம் குறைகிறது. இந்த சூழலில் உடலில் வலி தொடங்குகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு ரத்தம் சரியாக சென்றடையாமல் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றன.
ஆரம்ப அறிகுறி, கால் பிடிப்புகள்
கெட்ட கொலஸ்ட்ராலின் முக்கிய ஆரம்ப அறிகுறி கால்களில் பிடிப்புகள் வர ஆரம்பிப்பதாகும். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முதல் அறிகுறி இதுதான். திடீரென்று சில வேலைகளைச் செய்துவிட்டு, நீங்கள் எழுந்து நிற்கும்போது, உங்கள் கால்கள் மரத்துப்போகின்றன, உங்களால் கால்களை எடுத்து வைக்க முடிவதில்லை. கால்களில் பிடிப்புகள் மற்றும் கூச்ச உணர்வு ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான அறிகுறி இதுவே. மக்கள் பெரும்பாலும் பொதுவான பலவீனம் மற்றும் சோர்வு என்று கருதி அதைத் தவிர்த்து விடுகிறார்கள்.
மேலும் படிக்க | காலையில் முதுகுவலி அதிகமாக இருக்கிறதா? இந்த பிரச்சனையாக இருக்கலாம்
பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களில் எரிச்சல் அல்லது வலியும் மிக முக்கியமான அறிகுறியாகும். குறிப்பாக இரவில் படுக்கும்போது திடீரென மிளகாய் பட்டது போல் எரியும் உணர்வு எற்படும். இது தவிர, பாதங்களின் தோல் குளிர்ச்சியாகி, அடிக்கடி தொற்று ஏற்படுவது, பாதங்கள் மற்றும் குதிகால்களில் காயங்கள் ஆகியவையும் எற்படும். இவை விரைவில் குணமடையாமல் இருப்பதும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும்.
கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது
- பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
- கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- பால் பொருட்கள், முட்டை, பொரித்த உணவுகள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
- வைட்டமின் சி உள்ள பழங்கள், முழு தானியங்கள், ஓட்ஸ், ராகி, தினை, ஓட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
- போதைப்பொருட்களை உட்கொள்ளக்கூடாது.
- உப்பைக் குறைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss: காலை உணவில் இதை சாப்பிடுங்க, சூப்பரா எடை குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ