உடலில் ரத்தத்தின் அளவு குறைவதால், உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலும் சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் குறைந்த ஹீமோகுளோபினின் அறிகுறிகளாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்த பற்றாக்குறை காரணமாக, நீங்கள் இரத்த சோகைக்கு (Anemia) ஆளாகலாம். இந்தப் பிரச்சனை பெண்களுக்குத்தான் பெரும்பாலும் அதிகம் ஏற்படுகின்றது.  ஹீமோகுளோபினின் உடலில் ஆக்ஸிஜனை வழங்கும் பணியை செய்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், பல வகையான மன மற்றும் உடல் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம். 


பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள்


- தினசரி உணவில் இரும்புச்சத்து குறைந்தால் ஹீமோகுளோபின் குறையும். 


- பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் போது உடலில் ஹீமோகுளோபின் அளவும் குறையும். 


- மாதவிடாய் (Periods) காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதாலும் ஹீமோகுளோபின் குறையலாம். 


உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைத் தவிர்க்க வெண்டும். வைட்டமின்கள் மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படலாம். ஆகையால் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள்.


ALSO READ | கேரட் ஆரோக்கியம்தான்... ஆனாலும் பக்க விளைவுகள் உள்ளன 


இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்


- மிகவும் சோர்வாக உணர்வது. 


- தோல் மஞ்சள் நிறமாக இருப்பது.


- பலவீனமாக இருப்பது. 


- இதயத்துடிப்பு வேகமாக இருக்கும் பிரச்னையும் வரலாம். 


- மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.


உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இது மூச்சுத்திணறல் மற்றும் கனமான உணர்வுக்கு வழிவகுக்கும். ஆக்ஸிஜன் பற்றாக்குறை உடலில் இரத்த ஓட்டத்தையும் குறைக்கும். இது மேலும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமையக்கூடும். 


ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதால், தலைவலி மற்றும் மார்பு வலி ஏற்படக்கூடும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது, ​​நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த வேலையை செய்தாலும் அதிகப்படியான சோர்வும், உடல் வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். 


உடலில் இரத்தம் குரைவாக இருந்தால், வாதம், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் (Kidney) தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.


இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்


- உங்களுக்கும் ஹீமோகுளோபின் குறைபாடு பிரச்சனை இருந்தால், தினசரி உணவில் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளின் அளவை அதிகரிக்கவும். 


- இறைச்சி, மீன், சோயாபீன்ஸ், முட்டை, உலர் பழங்கள், ப்ரோக்கோலி, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பீட்ரூட், கேரட் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 


- இதனுடன் வைட்டமின் சி குறைபாட்டைப் போக்க திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுங்கள். 


- மருத்துவரின் ஆலோசனை பெற்று வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சப்ளிமெண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Sharp Memory: மறதி அதிகம் இருக்கிறதா; இந்த ‘3’ எளிய பயிற்சிகளை ட்ரை பண்ணுங்க..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR