Kidney Health: ‘இந்த’ அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பிற்கான எச்சரிக்கை மணி..!!

சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 19, 2022, 09:16 AM IST
  • நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம்
  • சிறுநீரக நோய் பிரச்சனை தீவிரமடையலாம்.
  • சர்க்கரை நோய் காரணமாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
Kidney Health: ‘இந்த’ அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பிற்கான எச்சரிக்கை மணி..!! title=

Kidney Health: சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

சிறுநீரகத்தின் செயல்பாடு, நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவது. சிறுநீரகம் (Kidney Health) சரியாக செயல்படவில்லை என்றால், இரத்தத்தை வடிகட்டும், சுத்தம் செய்யும் முக்கிய வேலை பாதிக்கும். சிறுநீரக நோயில், சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாது. பின்னர் இந்த பிரச்சனை, நாள் செல்ல செல்ல தீவிரமடையும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.

முக்கிய  அறிகுறிகள் 

நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படும்போது, ​​உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போவதால், உடலில் அரிப்பு, தசைப்பிடிப்பு, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, கால்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம், அதிக சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்க இயலாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக தூங்க முடியாமலும் சிரமங்கள் ஏற்படும்.

ALSO READ | செயற்கை சிறுநீரகம்: டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை இல்லாமல் போகலாம்!

சிக்கல் ஏற்பட காரணம்

ஹைபர் டென்ஷன், அதாவது உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர புகைபிடிப்பதும் ஒரு காரணம். அதிக உடல் எடையும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

கடைபிடிக்க வேண்டிய உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள்:

1. சீரான உணவை உட்கொள்வதன் மூலம் நாள்பட்ட சிறுநீரக நோய் தீவிரமடைவதை தடுக்கலாம். உணவில் குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்துங்கள்.

2. மது அருந்துவதையும், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். இந்த இரண்டு விஷயங்களும் நோயை மிகவும் தீவிரமாக்கும்.

3. நாள்பட்ட சிறுநீரக நோய் பிரச்சனையில் எடை கூடும். இதற்கு உணவு நிபுணரின் ஆலோசனையின் பேரில் உடல் எடையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.

ALSO READ | பகீர் தகவல்! அளவிற்கு மிஞ்சிய Vitamin D மத்திரைகளால் மன நோய் ஏற்படலாம்!

4. உங்கள் நல்ல உணவு பழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நோய் தீவிரமாவதை தடுக்கும். தொடர்ந்து 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன் தரும்.

5. நீரிழிவு பிரச்சனை இருந்தால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும். நாள்பட்ட சிறுநீரக நோயின் போது நீரிழிவு பிரச்சினை நோயை தீவிரமாக்கும்.

ALSO READ  | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News