மனிதர்களுக்கு குளிர்காலத்தில் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பல நோய்த்தொற்றுகள் ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.  பெரும்பாலான சுவாச நோய்த்தொற்றுகளுக்கு இருமல் தான் பொதுவான அறிகுறி என்று கூறப்படுகிறது.  எப்போதாவது இருமல் வந்தால் நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை அதுவே நாள்பட்ட இருமல் இருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  ஏனெனில் தொடர் மற்றும் நாள்பட்ட இருமல் நுரையீரல் தொற்றுநோயின் முதன்மையான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  அதேசமயம் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி ஒருவருக்கொருவர் மாறுபடும், இதன் பொதுவான அறிகுறிகளாக இருமல், நெஞ்சு வலி, மூச்சு திணறல், இருமல் இரத்தம், மிகுந்த சோர்வு, திடீர் எடை இழப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? 



உங்களுக்கு இருமல் வலியுடன் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  நுரையீரல் புற்றுநோயின் நிலை 1ல், பொதுவாக அறிகுறியாக இரத்தம் அல்லது இரத்தக் கறை படிந்த சளி உள்ளது, இது நோயின் தீவிரத்தன்மையை குறிக்கிறது.  எட்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் இருமல் அடிக்கடி சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்தும்.  நாள்பட்ட இருமலுக்கு நுரையீரல் புற்றுநோயைத் தவிர வேறு சில காரணங்களும் உள்ளது.  போஸ்ட்நாசல் ட்ரிப், ஆஸ்துமா, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், சிஓபிடி, இரத்த அழுத்த மருந்துகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.  


பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்கள் புகைபிடிப்பதால் ஏற்படுகின்றன, இருப்பினும் புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.  புகைபிடிப்பது மட்டுமின்றி ரேடான் வாயு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் மரபணு போன்றவையும் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாக அமையலாம்.  அதனால் நீங்கள் அடிக்கடி மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


மேலும் படிக்க | சீக்கிரமா உடல் எடையை குறைக்கணுமா? இந்த இட்லியை காலை உணவில் சாப்பிடுங்க போதும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ