உலகில் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகைகளில் முக்கியமான ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. சுவாசத்தை பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக, இளம் வயதினருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணமான அமைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர் மாதம் முழுவதும் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. 90 சதவிகித நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் புகை பிடிப்பதால் ஏற்படுகிறது. மேலும் காற்றுமாசு, சிகரெட் புகை, ரேடான் வாயு, மரபியல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணிகளாக கருதப்படுகின்றன.


ஆரம்பக்கட்டத்தில் நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது கடினம். ஏனெனில், இதற்கான அறிகுறிகளை சாதாரண சுவாசத்தொற்று எனக் கருதி கடந்துவிடுவோம். சில சமயங்களில், அறிகுறிகள் ஏதும் தென்படுவது கிடையாது. புற்றுநோய் கட்டி வளர்ந்த பிறகோ அல்லது வியாதி முற்றிய பிறகோ தான் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலான சமயங்களில் கண்டறியப்படுகிறது. முன்கூட்டியே கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்துவது சுலபம். இதனால், நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.


மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!


நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்:


* தீராத இருமல்
* இருமலில் ரத்தம் வெளியேறுதல்
* மூச்சுத்திணறல்
* குரல் கரகரப்பு
* அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல்
* நெஞ்சுவலி
* உடல் எடை இழப்பு
* பசியின்மை
* தலைவலி


நுரையீரல் புற்றுநோய் கட்டி வளர்ந்தால் முதுகு, விலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு வலி, மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படலாம். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொதுவானவை. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்)


மேலும் படிக்க |  கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ