உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்: மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக, இரத்தச் சர்க்கரைக் குறைவு நோய் இன்று மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஒரு நோயாளியின் இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், அவர் கோமா நிலைக்குச் செல்லலாம். அதன் உயர்விற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. இது நடக்கும்போதெல்லாம், உடல் சில அறிகுறிகளை கொடுக்கத் தொடங்குகிறது. இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான சிகிச்சை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதும் கடிமாக்கும். அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை அதிகமாக இருக்கும்போது இந்த அறிகுறிகள் தென்படும்:-


திடீர் கடுமையான தலைவலி
ஒருவரின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், தலைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தலைவலி ஏற்படுகிறது. இதனுடன், எரிச்சல், பதட்டம் மற்றும் இதய துடிப்பும் அதிகரிக்கும். இந்த அறிகுறிகளைக் கண்டால் எச்சரிக்கையாக இறுக்கம், மேலும் மருத்துவரை அணுகவும்.


மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்


சிறுநீர் நாற்றம்
சிறுநீரில் இருந்து திடீரென ஒரு விதமான நாற்றம் வர ஆரம்பித்தால், அது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வருவதற்கான அறிகுறியாகும். உண்மையில், இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், அது சிறுநீரகத்தின் வழியாக வெளியேறும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு இனிமையான நாற்றம் அதில் வரத் தொடங்கும். இதுபோன்ற ஏதாவது ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவதில் தாமதிக்க வேண்டாம்.


விவரிக்க முடியாத சோர்வு
வேலை செய்தப் பிறகு சோர்வாக இருப்பது இயல்பானது. ஆனால் நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் சோர்வாக உணர ஆரம்பித்தால், அது எச்சரிக்கை மணியாக்கும். உண்மையில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிக்கும் போது, ​​​​செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது, இதனால் ஒருவர் எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்வாக உணரத் தொடங்குகிறார்.


மங்கலான பார்வை
நீங்கள் திடீரென்று மங்கலான பார்வையைப் பார்க்கத் தொடங்கினால் அல்லது கண்களில் இருள் போன்ற உணர்வு தென்பட்டால் , அது உங்கள் இரத்தத்தில் உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறியாகும். அத்துடன் எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை குறைவதும் அத்தகைய அறிகுறிகளில் ஒன்றாகும். இந்த அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்த வேண்டாம்.


அதிகப்படியான பசி மற்றும் தாகம்
உங்கள் பசி அல்லது தாகம் திடீரென அதிகரித்தால், இதுவும் உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறியாகும். இதற்குக் காரணம், அதிகப்படியான குளுக்கோஸ் உடலுக்குள் செல்வதால், உடலில் நீர்ச்சத்து குறையத் தொடங்குகிறது. இதனால் உடல் அதிக பசியையும் தாகத்தையும் உணர ஆரம்பிக்கிறது. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ