தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் பலருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களால் உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் இருக்காது. ஜிம்முக்கு செல்லலாம் என ஆண்டு கணக்காக பிளான் போட்டிருந்தால் கூட அதனை அவர்களால் நடைமுறையில் செயல்படுத்தியிருக்க முடியாது. அவர்களுக்கு எல்லாம் இருக்கும் ஒரே வழி உணவு மூலம் மட்டுமே எடையை குறைக்க முடியும். அதுவும் தேர்ந்தெடுத்து உணவுகளை சாப்பிட வேண்டும். சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையெல்லாம் முறையாக கடைபிடிப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்கும் முயற்சி வெற்றியைக் கொடுக்கும். அந்தவகையில் கோதுமை மாவு சார்ந்த உணவுகளை தயார் செய்து உடல் எடையை பலரும் குறைக்க முயற்சி செய்கிறார்கள். அது நல்ல ரிசல்டை கொடுப்பதாக அவர்கள் நம்பும் நிலையில், நீர் கஷ்கொட்டை (water-chestnut) என்ற பழம் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவுதாக பலர் பரிந்துரைக்கின்றனர். இதை 'தண்ணீர் பழம்' என்றும் அழைப்பர்.


மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா? இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்


நீர் கஷ்கொட்டை பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இது எடை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே பல சுகாதார நிபுணர்கள் இதை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். நவராத்திரி விரதத்தின் போது கூட, பெரும்பாலான மக்கள் தண்ணீர் கஷ்கொட்டை மாவு சாப்பிடுவார்கள். கால்சியம், வைட்டமின்-ஏ, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் ஆகியவை நீர் கஷ்கொட்டையில் ஏராளமாக உள்ளன.


தண்ணீர் கஷ்கொட்டை மாவு எப்படி சாப்பிடலாம்?


நீங்கள் எளிதாக உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் கஷ்கொட்டை மாவை பல வழிகளில் பயன்படுத்தலாம். இதில் ரொட்டி, பக்கோடா, பூரி போன்றவை செய்யலாம். பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் காலை உணவில் இதை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாது. அதனால் அடிக்கடி அதிகமாக சாப்பிடமாட்டீர்கள். காலை சாப்பிட்டால் மதிய உணவு வரை இடையில் பசிக்காது.


தண்ணீர் கஷ்கொட்டை மாவின் மற்ற நன்மைகள்


- தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினசரி உணவில் தண்ணீர் கஷ்கொட்டை மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் அயோடின் உள்ளது.


- காலை உணவில் தண்ணீர் கஷ்கொட்டை மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிட்டால், நாள் முழுவதும் உடலில் ஆற்றல் அப்படியே இருக்கும் மற்றும் சாதாரண செயல்களைச் செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது.


- தண்ணீர் கஷ்கொட்டை மாவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, அத்துடன் சோடியம் மிகவும் குறைவாக உள்ளது, எனவே இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எப்போதாவது வெள்ளை வெங்காயம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ