தொப்பை கொழுப்பை கரைகப்பது எப்படி: உடல் எடையை குறைக்க, நம்மால் முடிந்த அனைத்து முறைகளையும் நாம் பின்பற்றுகிறோம், இதற்காக கடுமையான டயட் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளையும் நாம் செய்கிறோம். அப்படியிருந்தும், உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷமாகிவிடுகிறது. நினைத்த பலனை அடைவதில்லை. இதனால் நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். அத்துடன் இந்த அடிவயிற்றில் தொங்கும் தொப்பையால் பலர் சங்கடமாக உணர்வார்கள். இந்தநிலையில் இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், சில மசாலாப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நாம் தொப்பை கொழுப்பை குறைக்கலாம் என்கிறார். அந்த வகையில் சுவையை அதிகரிக்க நாம் அடிக்கடி மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவற்றில் பல ஆயுர்வேத பண்புகள் காணப்படுகின்றன, அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மசாலாக்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும்


1. சீரகம்
நம் அனைவரது வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருள் சீரகம். உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பதை விட மிக சிறந்த எளிய வழி எதுவுமில்லை. சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது. எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் சீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசாலாவை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் உணர்திறனில் மாற்றங்கள் வர ஆரம்பிக்கின்றன. இதில் உள்ள பைட்டோஸ்டெரால்களின் உதவியுடன் கெட்ட கொலஸ்ட்ராலை எளிதாக குறைக்கலாம்.


மேலும் படிக்க | எப்போதும் இளமை மாறாமல் ஆரோக்கியமாக இருக்கணுமா? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க


2. மஞ்சள்
மஞ்சள் உலகெங்கிலும் உள்ள அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருள். இது சிறந்த மசாலா மட்டும் அல்ல. எடை இழப்பை ஊக்குவிப்பதோடு உட்பட சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் பயனுள்ள வகையில் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. மஞ்சள் தாவர அடிப்படையிலான பாலிபினால் இந்த குர்குமின் ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் மேலும் இது அழற்சி எதிர்ப்புகளை கொண்டுள்ளது. எனவே இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.


3. கருப்பு மிளகு
கருப்பு மிளகில் பைபரின் உள்ளது, இது வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்ற செயல்முறையை விரைவுபடுத்தவும், கலோரிகளை விரைவாக எரித்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.


4. இலவங்கப்பட்டை
தொப்பை மற்றும் இடுப்பி சுற்றி இருக்கும் கொழுப்பை கரைக்க இலவங்கப்பட்டை மிகவும் உதவிகரமாக இருக்கும், ஏனெனில் இது சர்க்கரை கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது, இதனால் தொப்பை கொழுப்பு உறையாமல் இருக்கும். விரைவில் உடல் எடை குறைக்க தினமும் இரவில் தூங்கும் முன்பு இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி உடல் சுத்தமாகும். இதனால் உடல் முழுவதும் நச்சுத்தன்மை நீங்கி, காலையில் வயிற்றில் சேர்ந்திருக்கும் நச்சுகள் தானாக வெளியேறும் போது உடல் எடை குறைப்பது சுலபமாகும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | யூரிக் அமிலம் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா... இந்த உணவுகளை தொடவே தொடாதீர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ