தினமும் சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

இந்தியர்களின் உணவில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய சீரகம் உணவிற்கு சுவை சேர்ப்பது மட்டுமின்றி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

 

1 /4

சீரகத்தை பற்றி நாம் சிறு வயதிலிருந்தே கேட்ட ஒன்று இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் என்பது, இது உண்மை தான்.  தினமும் சீரகம் சாப்பிடுவது உணவை ஜீரணமடைய செய்கிறது, செரிமான திறன் மேம்படுகிறது.  

2 /4

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் சீரகம் உதவுகிறது, தொடர்ந்து 8 வாரங்கள் இருவேளை வீதம் சீரகம் சாப்பிட்டு வர உங்கள் ரத்தத்திலிருந்து நச்சுக்கள் வெளியேறி ரத்தம் இயற்கையாக சுத்திகரிக்கப்படும்.  

3 /4

உடல் எடை குறைப்பில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது, இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சீரகம் சாப்பிடாத பெண்களை விட சீரகம் சாப்பிடும் பெண்களிடம் உடல் எடை குறைப்பு அதிகமாக நிகழ்வதாக தெரியவந்துள்ளது.  

4 /4

சீரகத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது, இதனை தினம் சாப்பிடுவதன் மூலம் உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. சீரகத்தில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பொருட்கள் நிறைந்துள்ளதால், இது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது மற்றும் உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை சரிசெய்கிறது.