Weight Loss: ஓவரா உடல் எடை ஏறுதா? முட்டைகோஸ் சாப்பிடுங்க, உடனே குறையும்
Cabbage for Weight Loss: அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம்.
எடை இழப்புக்கு முட்டைக்கோஸ்: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.
குளிர்காலத்தில் எடை அதிகரிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. முட்டைக்கோஸ் உட்கொள்வது இந்த பருவத்தில் எடை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த க்ரூசிஃபெரஸ் காய் (cruciferous vegetable) அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கார்சினோஜென்களைத் தடுக்கும் மற்றும் அகற்றும் கலவைகள் நிறைந்துள்ளன. புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கார்சினோஜென்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
முட்டைகோஸை உட்கொள்வதன் மூலம் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். தாதுக்கள் நிறைந்த இந்த காய்கறி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இதனை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்திற்கு பயனுள்ள முட்டைக்கோஸ் உட்கொள்வது எடையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? இதுல கவனம் செலுத்தினா போதும்
முட்டைக்கோஸ் எடையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது:
முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இந்த காய் உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக கருதப்படுகின்றது.
இதில் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது சிறந்த உணவாக அமைகிறது. இதனை உட்கொள்வதால், செரிமானம் சரியாகி, மலம் எளிதாக வெளியேறி, மலச்சிக்கல் சரியாகிறது. வைட்டமின் சி நிறைந்த இந்த காய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
சல்ஃபர் கொண்ட கலவையான சல்ஃபோராபேன் இந்த காய்க்கு சில நேரங்களில் கசப்பான சுவையை அளிக்கிறது. ஆனால் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. இதை உட்கொள்வதால் புற்றுநோய் செல்கள் இறக்கின்றன. முட்டைக்கோஸில் காணப்படும் குளுட்டமைன் என்ற அமினோ அமிலம், ஒரு வலுவான அழற்சி எதிர்ப்பு கூறாகும். குளிர்காலத்தில் எடையைக் குறைக்க முட்டைக்கோஸ் சாப்பிடுவது சிறந்தது.
ஆயுர்வேதத்தின் படி முட்டைக்கோசின் நன்மைகள்:
ஆயுர்வேதத்தின் படி, முட்டைக்கோஸ் அதன் உலர்த்தும் தன்மை மற்றும் குளிர்விக்கும் சக்தி காரணமாக வாதத்தை அதிகரிக்கிறது. வாதத்தை குறைக்க, இந்த காயை பொடியாக நறுக்கி, மசாலா மற்றும் எண்ணெய் கொண்டு நன்றாக சமைக்க வேண்டும். இதனை உட்கொள்வதன் மூலம் குடல்புண்ணின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். இது தசைகளை பலப்படுத்துகிறது. மேலும் இது கண்புரையிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இந்த காய் மலச்சிக்கலை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்தது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: 7 நாட்களில் 5 கிலோ எடையை வேகமாக குறைப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ