எடை இழப்புக்கு ஆப்பிள் சைடர் வினிகர்: இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினமான வேலை, இதற்கு கடுமையான உடற்பயிற்சிகளும் கடுமையான உணவுக் கட்டுப்பாடும் தேவை. இன்றைய பிஸியான வாழ்க்கையில், ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிட பலருக்கு நேரமிருப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பல இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு மேஜிக் பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.


உடல் எடையை குறைக்கும் இந்த பானத்தை தொடர்ந்து அருந்தவும்


இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் ஜீ நியூசிடம், ஆப்பிள் சைடர் வினிகரை தவறாமல் மற்றும் சரியாக உட்கொண்டால், தொப்பை கொழுப்பை பெருமளவு குறைக்க முடியும் என்று கூறினார்.


மேலும் படிக்க | Health Tips: சுகர் நோயாளிகளுக்கு இந்த 'பழம்' ஒரு வரப்பிரசாதம்


ஆப்பிள் வினிகர் எடையைக் குறைக்கும்


ஆப்பிள் சைடர் வினிகர் நொதித்தல் (ஃபர்மெண்ட்) மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஆப்பிள் சாற்றில் இருந்து சற்று வித்தியாசமானது. அதன் சுவையிலும் அதிக மாற்றம் உள்ளது. இது ஆப்பிள் சாற்றின் அமில வடிவமாகும், இது மெலிதான உருவத்தைப் பெற உதவுகிறது.


ஆப்பிள் வினிகர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. அதே போல் இது கொழுப்பை அதிகரிக்காத குறைந்த கலோரி பானமாகவும் இருக்கிறது. கார்போஹைட்ரேட்டுகளும் இதில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன, இது எடையை அதிகரிக்கும் ஊட்டச்சத்து ஆகும். இது நமது வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.


ஆப்பிள் வினிகரை எப்படி உட்கொள்வது?


ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து, அதில் 2 டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்க்கவும். இந்த மேஜிக் பானத்தை காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும். ஒருபோதும் ஆப்பிள் சைடர் வினிகரை நேரடியாக குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். ஏனெனில் இது பல் சேதம், நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்தும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுகர் லெவல் குறைய மாட்டேங்குதா? இப்படி பண்ணுங்க.. உடனே குறையும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ