உடல் எடை குறையணுமா? இந்த 5 உணவுகள் காலையில் வேண்டாம்
Weight Loss Tips:சரியான அளவில் உட்கொள்ளப்படும் ஹெவி பிரேக்பாஸ்ட், நாளின் தொடக்கம் முதல் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், பசி எடுக்காமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.
காலை உணவை உட்கொள்ளும்போது எப்போதும் சத்தான உணவை உட்கொள்வது மிக அவசியமாகும். சரியான அளவில் உட்கொள்ளப்படும் ஹெவி பிரேக்பாஸ்ட், நாளின் தொடக்கம் முதல் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், பசி எடுக்காமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும். இதன் மூலம், தேவையற்ற ஆரோக்கியம் இல்லாத உணவுகள் உட்கொள்வதை நாம் தடுக்கலாம். இதன் மூலம் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சிலர் காலையில் ஹெவியான காலை உணவை உட்கொண்டாலும் அதில் ஆரோக்கியமான விஷயங்களை சேர்க்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. காலை உணவில் எந்தெந்த விஷயங்களை சேர்க்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
காலை உணவில் எண்ணெய் அதிகம் உள்ள மற்றும் கடைகளில் வாங்கிய துரித உணவுகளை சேர்க்க வேண்டாம்
காலை உணவில் எண்ணெய் பொருட்களை சாப்பிடவே கூடாது. சிலர் காலை உணவாக கடையிலிருந்து வாங்கிய தின்பண்டங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அப்படி வாங்கினால், அவற்றில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால், அவை உடலுக்கு ஆற்றல் அளிப்பதற்கு பதிலாக உங்கள் எடையை அதிகரிக்கும்.
ஸ்மூத்தி வேண்டாம்
ஸ்மூத்தி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், காலை உணவில் இதை சேர்ப்பது சரியல்ல. ஸ்மூத்தியில் அதிக அளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம். இதை சாப்பிட்டால் காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால்தான் மாலையில் ஸ்மூத்தி சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க | சீரகம் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை: பக்க விளைவுகளின் பட்டியல் இதோ!!
காலையில் காபி சாப்பிட வேண்டாம்
பெரும்பாலான மக்கள் புத்துணர்ச்சி பெற காலையில் டீ அல்லது காபி குடிக்கிறார்கள், ஆனால் சர்க்கரை அல்லது கிரீம் கலந்த காபி உங்களை புத்துணர்ச்சியடையச் செய்வதற்குப் பதிலாக எடையை அதிகரிக்கச் செய்கிறது. காபி கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்றால் பிளாக் காபி குடிக்கலாம். அல்லது காலையில் காபியே குடிக்காமல் இருப்பதும் நல்லது.
பாக்கெட் ஜூஸ் குடிக்கக் கூடாது
காலை உணவில் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் பேக் செய்யப்பட்ட ஜூஸ் குடிப்பது தீங்கு விளைவிக்கும். இதில் அதிக சர்க்கரை இருப்பதால், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
வெள்ளை பிரெட் வேண்டாம்
பெரும்பாலான மக்கள் காலை உணவில் வெள்ளை ரொட்டியை சேர்க்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் இதை விரைவாக தயாரிப்பது விடலாம் என்பதுதான். ஆனால் அது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காலை உணவில் வெள்ளை பிரெட்டை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கிறது. இதில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Protein Quality: இந்தியர்களின் உணவில் தரமான புரதம் இல்லையா? என்ன சொல்றீங்க?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ