உடல் எடை குறையணுமா; டீயுடன் இவற்றை சாப்பிடாதீர்கள்
உடல் எடைய குறைய பல வகையில் முயற்சி எடுத்தாலும், சரியான டயட்டை பின்பாற்றாத வரையில், உடல் எடையை குறைக்கவே முடியாது. பல சமயங்களில் நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக நமது எடை குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும்.
உடல் எடைய குறைய பல வகையில் முயற்சி எடுத்தாலும், சரியான டயட்டை பின்பாற்றாத வரையில், உடல் எடையை குறைக்கவே முடியாது. பல சமயங்களில் நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக நமது எடை குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும்.
தேநீர் வாழ்க்கையின் உயிர்நாடியாகவே உள்ளது. சிலருக்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி அதிகமாகும். உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் கீழே குறிப்பிட்டுள்ள சிலவற்றை டீயுடன் காலை உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்தால், இன்றே அதனை மாற்றிக் கொள்ளவும். ஏனெனில் அது உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியைக் கெடுத்துவிடும். தெரியாமல் பலர் காலை உணவில் இதுபோன்ற விஷயங்களைச் சேர்த்துக்கொள்வதால், அவர்களின் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!
டீயுடன் குக்கீஸ், பிஸ்கட்டுகள் சாப்பிடக் கூடாது
காலையில் டீயுடன் குக்கீஸ், பிஸ்கட் சாப்பிடுவது பலரது வழக்கம். இதனால் தங்கள் பசியைக் கட்டுப்படுத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இதன் காரணமாக தொப்பை தான் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். உடல் எடை குறையவே குறையாது எனவே, காலையில் பிஸ்கட் அல்லது குக்கீகளை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும். உங்கள் முயற்சி அனைத்தும் பாழாகி விடும். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.
பொரித்த உப்பு, காரம் உணவுகளை சாப்பிடவே கூடாது
பெரும்பாலானோருக்கு, தேநீருடன் உப்பு கார ஸ்னேக்ஸ்கள், பொரித்த உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள், ஆனால் வறுத்த உப்பு பண்டங்களில் நிறைய கொழுப்பு உள்ளது. தேநீருடன் உப்பு காரம் கலந்த பொரித்த உணவை உண்பதால், உங்கள் தொப்பை, உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது.
நூடுல்ஸ் சாப்பிடக்கூடாது
பலர் காலை உணவில் நூடுல்ஸ் சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்றாலும், இது ஆரோக்கியமான காலை உணவாக கருதப்படுவதில்ல. இந்த காரணத்திற்காக, நீங்கள் காலை உணவாக நூடுல்ஸ் சாப்பிடக்கூடாது. இதனால் பல நோய்களும் வரலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த ஒரு மருத்துவ சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)
மேலும் படிக்க | பாலியல் பிரச்சனைக்கு வயாகரா தேவையில்லை; மாதுளையே போதும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR