ஆப்பிள் ஜூசின் அபார நன்மைகள்: உடல் பருமன் உடனே குறையும்.. இப்படி குடிங்க!!
Weight Loss With Apple Juice: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை குறைப்பு குறிப்புகள்: இன்றைய அவசர காலகட்டத்தில் சில விஷயங்களுக்காக நாம் ஏங்குகிறோம். சில விஷயங்கள் நமக்கு வேண்டாம் என நினைக்கிறோம். அப்படி வேண்டாம் என பலர் நினைக்கும் ஒரு விஷயம் தான் அதிக எடை. ஆனால், இதுதான் அனைவரையும் ஆட்கொள்ளும் விஷயமாக உள்ளது. அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அது அத்தனை சுலபமாக நடப்பதில்லை. தங்கள் உடல் எடையை பராமரிக்க பலர் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள் ஜூஸின் நன்மைகள்
உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க பழங்களை உட்கொள்வது மிகவும் அவசியம். அதிலும் ஆப்பிள் பழம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும். ஆப்பிள்களை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே அனைத்து பழங்களையும் வெறும் வயிற்றில், காலை வேளைகளில் சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆப்பிளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை குறைக்க ஆப்பிள் ஜூஸ்:
உங்கள் எடை அதிகரித்து, அதை குறைக்க விரும்பினால், உங்கள் தினசரி டயட்டில் கண்டிப்பாக ஆப்பிள் ஜூஸை சேர்த்துக்கொள்ளலாம். இதில் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை குடிப்பதால், உங்கள் செரிமான அமைப்பும் சீராக இருக்கும். இது தவிர, ஆப்பிள் சாறு உட்கொள்வதன் மூலம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தவிர்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பிற நன்மைகள்
கண்களுக்கு நன்மை பயக்கும்:
ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் கண்பார்வை கூர்மையாகிறது. ஏனெனில் ஆப்பிளில் போதுமான அளவு வைட்டமின் ஏ உள்ளது. ஆகையால் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | ஒல்லியா எலும்பும் தோலுமா இருக்கீங்களா? கொளுகொளுன்னு கொளுக்க இதை சாப்பிடுங்க
எடையைக் குறைக்க உதவும்:
வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும். ஏனென்றால், ஆப்பிள் சாற்றில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் செரிமான அமைப்பை வலுவாகவும், வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கவும் உதவும். அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், எடை வேகமாக குறைகிறது.
ஆஸ்துமா:
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள சத்துக்கள் ஆஸ்துமாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஆஸ்துமாவைத் தடுக்கவும், அதிலிருந்து விடுபடவும் விரும்பினால், தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸைக் குடிக்கலாம்.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு:
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். ஆப்பிள் சாற்றில் நற்பலன்கள் அளிக்கும் பல விதமான கூறுகள் உள்ளன். இந்த கூறுகள் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பாலுடன் நெய் கலந்து இரவில் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ