ஓவர் எடை பிரச்சனையா? இதை மட்டும் சரி பண்ணுங்க.. வேகமா குறைச்சிடலாம்!!

Weight Loss Tips: சில பழக்கங்களை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட வாழ்க்கை முறை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2023, 01:24 PM IST
  • பலர் உடல் எடையை குறைக்க உணவை தவிர்க்கிறார்கள்.
  • அல்லது, உணவின் அளவை குறைக்கிறார்கள்.
  • ஆனால், இது மிக தவறான பழக்கமாகும்.
ஓவர் எடை பிரச்சனையா? இதை மட்டும் சரி பண்ணுங்க.. வேகமா குறைச்சிடலாம்!! title=

உடல் எடையை குறைக்கும் வழிகள்: உலகம் முழுவதும் 40 சதவீதம் பேர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகியவையாகும். இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியுள்ளது. இதில், சரியான உடற்பயிற்சியுடன், என்ன, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனுடன், தினமும் ஒரே மாதிரியான சலிப்பான உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். நமது உணவில் சரியான அளவு நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்ப்பதால், நமது எடையை சரியாக வைத்திருக்க முடியும். 

உடல் பருமனுக்கான காரணம்

எந்த வித காரணமும் இல்லாம ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படாது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கும். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது இதன் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நமக்கு இருக்கும் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் தவறான பழக்கவழக்கங்களுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது. சில பழக்கங்களை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட வாழ்க்கை முறை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இரவில் சூடான பால்

இரவில் சூடான பால் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அப்படி இருந்து உங்கள் உடல் எடையும் அதிகமாக இருந்தால், நீங்கள் இந்த பழகத்தை கைவிடவேண்டும். ஏனென்றால் இரவில் சூடான பால் குடித்துவிட்டு தூங்குவதால் உடலில் அதிக கலோரிகள் சேர்கின்றன. அகையால், நீங்கள் இதை தவிர்ப்பது நல்லது. மறுபுறம், தூங்குவதற்கு முன் டீ மற்றும் காபி குடிப்பதால், உங்களுக்கு சரியான தூக்கம் கிடைக்காமல் போகலாம். இதன் காரணமாக ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும். இதன் காரணமாக உங்கள் எடை வேகமாக அதிகரிக்கிறது.

இரவில் டிவி

இது தவிர, இரவு வெகு நேரம் வரை டிவி பார்க்கும் பழக்கம் அல்லது போனில் ஏதாவது பார்த்துக்கொண்டு இருக்கும் பழக்கமும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். எனவே இந்த கெட்ட பழக்கம் இருந்தால் இதை உடனடியாக விட்டுவிடுவது நல்லது. 

மேலும் படிக்க | நரை முடிக்கு இனி கெமிக்கல் ஹேர் டை வேண்டாம், இந்த இயற்கை வைத்தியம் போதும்

சரியான நேரத்தில் உணவு

பலர் உடல் எடையை குறைக்க உணவை தவிர்க்கிறார்கள், அல்லது, உணவின் அளவை குறைக்கிறார்கள். ஆனால், இது மிக தவறான பழக்கமாகும். ஏனெனில் பசியின் காரணமாக உடலில் வீக்கம் ஏற்படலாம்.  சில சமயம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்துவிட்டு, பசி அதிகமானவுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை சிலர் சாப்பிடுவதுண்டு. இதுவும் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகின்றது. ஆகையால் சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். 

சமச்சீரான உணவு

பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சமச்சீரான உணவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த உணவுகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. சர்க்கரை உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்புகளை தவிர்க்கவும். 

அதிக அளவில் மருந்துகள்

இவை தவிர, வலி ​​நிவாரணி போன்ற மருந்துகளை அதிகமாக உட்கொண்டால், நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிகப்படியான மருந்துகளை உட்கொள்வது உங்கள் எடையை அதிகரிக்கச்செய்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை காணாமல் போய்விடும்: சூப்பரான டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News