எடை இழப்புக்கு உலர் திராட்சை: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. எனினும், உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலர் திராட்சை


உலர் திராட்சை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஆனால், உடல் எடையை குறைக்கவும் உலர் திராட்சை மிகவும் உதவும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆம், உடலின் பல்வேறு இடங்களில் கொழுப்பு சேர்ந்திருப்பவர்களுக்கு திராட்சை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். இது கொழுப்பை எரிப்பதை துரிதப்படுத்துவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், குடல் இயக்கத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது. இது தவிர, உலர் திராட்சை பல வழிகளில் கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம். 


உலர் திராட்சை சாப்பிடுவதால் உடல் பருமன் குறையுமா? 


உலர் திராட்சையை சாப்பிடுவது கண்டிப்பாக உடல் பருமனை குறைக்க உதவும். முதலில், இது இனிப்புகளுக்கான ஏக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. கூடுதல் கலோரிகளைச் சேர்க்காமல் இனிப்பு பசியைக் கட்டுப்படுத்த அவை உதவியாக இருக்கும். உலர் திராட்சை நார்ச்சத்து நிறைந்தது. ஆகையால், இது நமக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. 


மேலும் படிக்க | வலுவான எலும்புகள் வேண்டுமா? இதை சாப்பிடுங்க போதும்.. இன்னும் பல நன்மைகளும் இருக்கு!!


கூடுதலாக, உலர் திராட்சை உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவுகின்றது. மேலும், உலர் திராட்சை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக உணவு வேகமாக செரிக்கப்படுகிறது. இதனால், வயிறு சுத்தமாக இருக்கும். மேலும் எடையும் அதிகரிக்காது.


எடை இழப்புக்கு திராட்சை சாப்பிட சரியான வழி: 


உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடவும்


எடை இழப்புக்கு உலர் திராட்சையும் சாப்பிட சிறந்த வழி, முதலில் அவற்றை தண்ணீரில் ஊறவைப்பதுதான். இரவில் இப்படி ஊறவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் திராட்சையை சாப்பிடுங்கள். இது குடல் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும்.


உலர் திராட்சை பால் குடிக்கவும்


உலர் திராட்சையுடன் பால் குடிப்பதால், உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிப்பதோடு அது எடை இழப்புக்கும் உதவும். மேலும், ஹார்மோன் ஆரோக்கியத்தை சரியாக வைத்து எடையை குறைக்க இது உதவுகிறது.


சாலட், ஸ்னாக்ஸ்களில் உலர் திராட்சை


சாலடுகள் மற்றும் சிற்றுண்டிகளில் உலர் திராட்சையைச் சேர்ப்பது இனிப்பிற்கான உங்கள் ஏக்கத்தைக் குறைக்க உதவும். கூடுதலாக இது நார் வகையாகவும் செயல்படுவதால் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். 


எடை இழப்புக்கு திராட்சை சாப்பிட சிறந்த நேரம் எது?


எடை இழப்புக்கு திராட்சையை சாப்பிடுவதற்கு காலை நேரம் சரியான நேரமாக இருக்கும். மேலும், மாலை நேர சிற்றுண்டியின் போதும் இதை உட்கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும், உலர் டிராட்சை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. 


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த ஒரு காய்கறி வரப்பிரசாதம்..! கோடையில் சாப்பிடுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ