உடல் பருமன் குறித்து மக்களின் விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகின்றது. கொரோனா தொற்றுக்குப் பிறகு, மக்கள் தங்கள் எடையைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எடையைக் குறைக்க இப்போதெல்லாம் பல வழிகள் உள்ளன. ஆனால் இயற்கையான வழிகளுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அதில் உறக்கம் மிகப்பெரிய மற்றும் எளிதான வழியாகும். இதன் மூலம் எடையை சுலபாக குறைக்கலாம். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, ​​​​நாம் அடிக்கடி உறக்க முறையை புறக்கணிக்கிறோம், ஆனால் இது எடை இழப்பு செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மோசமான தூக்கத்தினால், எரிச்சல், ஒழுங்கற்ற உணவு, இன்சுலின் பிரச்சனைகள் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகையால் எடையை குறைக்க விரும்பினால், ஒரு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உறக்கம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, உறங்கும் மும் நாம் என்ன உட்கொள்கிறோம் என்பதும் முக்கியமாகும். உறங்கும் முன், தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை உட்கொள்வது நல்லதல்ல, ஏனெனில் அது உங்கள் தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும் சில பானங்கள் தசை சக்தியை வளர்க்கவும், உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், உறங்கும் முன் கொழுப்பை எரிக்கவும் உதவும்.


இரவில் உறங்குவதற்கு முன் அதிகமாக சாப்பிடுவது மிக தவறாகும். எதையாவது சாப்பிட்டு அல்லது பருகிவிட்டு உடனடியாக தூங்குவது கூடுதல் கலோரிகளை சேர்க்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான ஆபத்து அதிகரிப்பதுடன் உங்கள் எடையும் வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. நீங்கள் உண்மையிலேயே உங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் உணவை உண்ணுங்கள். மேலும், தூங்கும் போது எடை இழப்புக்கு மிகவும் நல்லது என்று கருதப்படும் சில பானங்களை உட்கொள்ளுங்கள். இரவில் பானங்களை உட்கொண்டு உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


இலவங்கப்பட்டை தண்ணீர்


இலவங்கப்பட்டை நீர் எடை இழப்புக்கு உதவும் என்று நீண்ட காலமாக நம்பப்படுகிறது. ஒரு ஆய்வில், இலவங்கப்பட்டை தெர்மோஜெனீசிஸை (உடல் வெப்ப உற்பத்தியை) 20% வரை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டது. இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை பசியையும் குறைக்கிறது. இது ஆரோக்கியமற்ற உணவை நாம் உட்கொள்வதை கட்டுப்படுத்த உதவுகிறது. இலவங்கப்பட்டை நீர் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுவதைத் தடுக்கிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் இணைந்து, இலவங்கப்பட்டை பானங்கள் எடை இழக்க ஒரு சிறந்த வழியாகும்.


மேலும் படிக்க | இந்த விதைகள் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிரி...! எளிதான நிவாரணம்


இலவங்கப்பட்டையின் நன்மைகள்


இலவங்கப்பட்டை பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த மசாலா எடை இழப்புக்கு சிறந்தது. படுக்கை நேரத்தில் தேநீர் வடிவில் இதை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். இந்த பானம் உங்கள் எடை இழப்பு செயல்முறையையும் துரிதப்படுத்தும். அதன் சுவையை மேம்படுத்த நீங்கள் அரை தேக்கரண்டி தேன் சேர்க்கலாம்.


இலவங்கப்பட்டை நீர் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எடை குறைக்கவும் ஒரு சுவையான மற்றும் எளிதான வழியாகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனுடன், இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தும்.


இலவங்கப்பட்டை பானம்


தேவையான பொருட்கள்


தண்ணீர் - 1 கப்
இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி


செய்முறை


- தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.
- கருப்பு மிளகு தூள், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலவை நன்கு கொதித்ததும், நன்கு கிளறவும்.
- பானத்தை வடிகட்டி சூடாக குடிக்கவும்.


வெந்தய தேநீர்


சிலருக்கு இலவங்கப்பட்டை தேநீர் பிடிக்கவில்லை என்றால், வெந்தய தேநீரை அடுத்த விருப்பமாக உட்கொள்ளலாம். நல்ல உறக்கத்திற்கு, கண்டிப்பாக வெந்தய டீ குடிப்பதால் பலன் கிடைக்கும். நீங்கள் இரவில் கனமான உணவை சாப்பிட்டிருந்தால், அது செரிமானத்தை மேம்படுத்துவதற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதைச் செய்ய, ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் வடிகட்டி, தண்ணீரைப் பிரித்து, இரவு தூங்கும் முன் இந்த நீரை வெதுவெதுப்பாக சுடவைத்து குடிக்கவும். இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடல் எடையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடியும்.


மஞ்சள் பால்


மஞ்சளின் பண்புகளை நாம் அனைவரும் அறிவோம். மஞ்சள் உணவுக்கு நிறத்தையும் சுவையையும் தருவது மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களுக்கும் பெயர் பெற்றது. சளி, இருமல் அல்லது காயத்தை ஒரு சிட்டிகையில் குணப்படுத்துவதைத் தவிர, எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். தினமும் இரவில் தூங்கும் முன் மஞ்சள் பால் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி செய்தால் சில நாட்களில் எடை குறைவதை உணர்வீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Migraine: ஒற்றை தலைவலியை ஓட ஓட விரட்டும் வீட்டு வைத்தியங்கள்... இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ